Advertisment

அ.தி.மு.க முதல் முறை ஜெயிச்சதும் சி.எம் பதவி கேட்ட எஸ்.எஸ்.ஆர்: எம்.ஜி.ஆர் கொடுத்த ரியாக்ஷன்

எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை விட தூய தமிழில் நன்றாக வசனம் பேசி நடிக்கக்கூடிய திறமை உடையவர்.

author-image
WebDesk
New Update
MGR SSR

எம்.ஜி.ஆர் - எஸ்.எஸ்.ஆர்

க்ளாசிக் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜியை போல் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். 1928-ம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்த இவர், நாடகத்தில் நடித்து தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர். ஆரம்பத்தில் நாடகங்களில் காவலாளி வேடத்தில் நடித்து வந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஒரு கட்டத்தில் அந்த வேடத்தில் இருந்து மாற வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

Advertisment

மேலும் காவலாளி வேடத்தில் வாழ்க்கை இப்படியே சென்றுவிடும் என்று யோசித்து நாடக கம்பெனி முதலாளியிடம் சென்று தனக்கு வேறு ஒரு வேஷம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட அந்த முதலாளி உனக்கு எந்த வேடத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்க, சிவலீலா நாடகத்தில் நீங்கள் நடித்து வரும் சண்முக பாண்டியன் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட நாடக குழுவின் முதலாளி டி.கே. சண்முகம் அந்த வேஷத்தை அவருக்கு கொடுத்தார். அதன்பிறகு பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன், அண்ணா மற்றும் பெரியார் மீது பெரிய பற்று வைத்திருந்தார். அண்ணாவை பற்றி தெரிந்திருந்தாலும் அவர் எப்படி இருப்பார் என்று தெரியாத எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவரை ஒருமுறையாகவது பார்த்துவிட வேண்டும் என்று எண்ணியுள்ளார்.

அப்போது ஒரு நாடகத்திற்காக ஈரோடு வந்திருந்த அண்ணாவுக்கு நாடகத்தில் மேக்கப்போடும் வாய்ப்பு எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு கிடைத்துள்ளது, அப்போது அண்ணா எப்படி இருப்பார் என்று தெரியாததால் அவருக்கு மேக்கப் போடும்போது தலையை திருப்பி பார்த்ததால் கடுமையாக பேசியுள்ளார். அதன்பிறகு பக்கத்தில் இருப்பவரை கைகாட்டி இவர்தான் அண்ணாவா என்று அவரிடமே கேட்டுள்ளார்.

எஸ்.எஸ்.ராஜேந்திரன் அப்படி கேட்டதும் நான் தான் அண்ணா என்று பதில் வந்துள்ளது. இதை கேட்ட அவர், இவரை இப்படி செய்துவிட்டோமே என்று எண்ணியுள்ளார். ஆனாலும் அதன்பிறகு திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து பல செயல்களை செய்துள்ள எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை விட தூய தமிழில் நன்றாக வசனம் பேசி நடிக்கக்கூடிய திறமை உடையவர்.

அதேபோல் நடிகராக இருந்து முதன் முதலில் அரசியலில் வெற்றி பெற்றவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தான். எம்.ஜி.ஆருடன் நெருங்கிய நட்பில் இருந்த எஸ்.எஸ்.ராஜேந்திரன் கடந்த 1980-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அப்போது முதல்ராக இருந்த எம்.ஜி.ஆர் எஸ்.எஸ்.ராஜேந்திரனை அழைத்து எனது அமைச்சரவையில் நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உங்கள் துறையை நீங்களே தேர்வு செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட எஸ்.எஸ்.ரஜேந்திரன் நான் முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் கலகலவென சிரித்துள்ளார். அதன்பிறகு எம்.ஸி.ஆர் அமைச்சரவையில் எஸ்எஸ்.ராஜேந்திரன் இல்லை என்றாலும், சிறுசேமிப்பு துறை துணை தலைவர் பதவியை அவருக்கு கொடுத்து அழகுபார்த்தவர் எம்.ஜி.ஆர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment