உலக நாடுகளில் இதுவரை நடைபெற்று வந்த கோக் ஸ்டூடியோ இசை நிகழ்ச்சி தற்போது மீண்டும் இந்தியாவில் நடைபெற உள்ளது. சென்னையில் தொடங்கும் கோக் ஸ்டூடியோ தமிழ் நிகழ்ச்சியின் முதல் பதிப்பில் 25-க்கு மேற்பட்ட இசைக்கலைஞர்கள் இணைந்து 8 பாடல்களை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisment
கோக் ஸ்டுடியோ தமிழின் பிரீமியர் சீசனின் ஒரு பகுதியாக பாடகி பாடகி சின்மயி ஸ்ரீபாதா இருப்பார் என்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "கோக் ஸ்டுடியோ தமிழின் சீசன் 1 இன் அழகான, இசை மற்றும் அழகான பாடலின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
2011 இல் இந்தியாவில் ஒளிபரப்பப்பட்ட கோக் ஸ்டுடியோ இசை நிகழ்ச்சி, நான்கு சீசன்களுக்கு ஓடியது. இது பல்வேறு இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் சில நேரங்களில், இந்த கலைஞர்கள் கிளாசிக் பாடல்களின் வெவ்வேறு பதிப்புகளை உருவாக்குவார்கள். சில சமயங்களில் புதிய மற்றும் ஒரிஜினல் டிராக்குகளை உருவாக்குவார்கள்.
Advertisment
Advertisements
கோக் ஸ்டுடியோ இந்தியாவின் பெரும் அங்கமாக ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், இருந்துள்ளார். அதே சமயம் தமிழ் பதிப்பில் ரஹ்மான் இருப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த நிகழ்ச்சி குறித்து ரஹ்மான் இதுவரை தனது சமூக வலைதளங்களில் எந்த பதிவையும் வெளியிடவில்லை. அதே சமயம் ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான், வரவிருக்கும் சீசனின் ஒரு பகுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
கோக் ஸ்டுடியோ வரவிருக்கும் சீசனை அறிவிக்கும் ப்ரமோ தற்போது வெளியிட்டுள்ளது. சீன் ரோல்டன் இசையமைத்த பாடலில் சின்மயி மற்றும் ராப்பர் அறிவு உட்பட தமிழ் இசைத் துறையின் சில முக்கிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி பிரபலமான மற்றும் பிரியமான தமிழ் திரைப்படப் பாடல்களை மறுபரிசீலனை செய்வது மட்டுமல்ல, சில ஒரிஜினல் பாடல்களை உருவாக்குவதற்கான இடமாகவும் உள்ளது என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
I am really happy to be a part of something beautiful, original and a lovely song for Season 1 of Coke Studio Tamil. இது நம்ம இசை.