Advertisment

பட்டம் பெற்று திரும்பும் பொம்மி... எதிராளியாக மாறிய அனிருத் : கலர்ஸ் தமிழ் சீரியல்

மாறுவேடமிட்ட அனிருத், பொம்மியை மறுமணத்திலிருந்து மீட்டு, பாரிஸ்டர் ஆக வேண்டும் என்ற அவளது கனவை நிறைவேற்ற லண்டனுக்கு அனுப்புகிறான்.

author-image
WebDesk
New Update
Bommi Serial

பொம்மி

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பொம்மி பி.ஏ.பி.எல். பிரவிஷ்தா மிஸ்ரா மற்றும் அவுரா பட்நாகர் படோனி ஆகியோர் முறையே அனிருத் மற்றும் பொம்மி என முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், மாறுவேடமிட்ட அனிருத், பொம்மியை மறுமணத்திலிருந்து மீட்டு, பாரிஸ்டர் ஆக வேண்டும் என்ற அவளது கனவை நிறைவேற்ற லண்டனுக்கு அனுப்புகிறான்.

Advertisment

தொடர்ந்து இந்த சீரியலில் அடுத்து வர இருக்கும் எபிசோடில், பொம்மி இறுதியாக வளர்ந்த பெண் (அஞ்சல் சாஹு) (Anchal Sahu) மற்றும் அவள் திரும்பி வருவதைப் பற்றி சுமதிமாவுக்கு ஒரு கடிதம் அனுப்புகிறாள். இந்த எட்டு வருடங்களில் பொம்மி பட்டம் பெற்று சட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்று அனிருத்தின் கனவை நனவாக்கியுள்ளார்.

பொம்மி 8 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லி நகருக்குத் திரும்பும் நிலையில் அனிருத் அவருக்கு எதிர்மறையாக மாறுகிறார் இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குழந்தை திருமணம் பெண் கல்வி என சமூகத்திற்கு தேவையான கருத்துக்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தமிழில் புதிய கதைக்களம் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update Colors Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment