கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் திகில் சீரரியவான மோகினி ஆட்டம் சீரியலில், மந்திர சாம்ராஜ்யத்தில், நிஷாந்தி மலர் புதர்களால் பிணைக்கப்பட்டு, உதவிக்காக காத்திருக்கையில், மஹா அசுரனின் சதியையும் எதிர்கொண்டு, மோகன் நிஷாந்தியை மரணத்தின் விளிம்பில் இருந்து மீட்கிறான். பின்னர், ஒரு மாய மனிதர் வெளிப்பட்டு, மந்திர சாம்ராஜ்யத்திலிருந்து தப்பிப்பது இருவருக்கும் சாத்தியமில்லை என்று எச்சரிக்கிறது.
இதனை எதிர்கொண்டு, மகா அசுரன் நிஷாந்திக்கும் மோகனுக்கும் ஒரு சதி ஒப்பந்தம் வழங்குகிறார், அதாவது, மோகனை கைவிட்டால் நிஷாந்தி சக்தியுடன் வாழ முடியும்; நிஷாந்தியை விட்டு விலகினால் மோகனுக்கு சுதந்திரம் கிடைக்கும். ஆனால் இருவரும் இந்த சதியை மறுத்து, மகா அசுரனின் சிலையை தேட செல்கிறார்கள். இதன்போது, நிஷாந்தியின் பாடலின் மூலம், மோகனுக்கு ஷாந்தனுவின் பழைய நினைவுகள் மீண்டும் எழுகின்றன.
ஆனால், நிஷாந்தி, மகா அசுரனின் தீய நோக்கங்களை உணர்ந்து, மோகனை பாதுகாக்க தன்னுடைய துணிச்சலான முடிவுகளை எடுக்கிறாள். மகா அசுரன், ஷலாகாவுக்கு அவளுடைய நித்திய இளமையை அளிக்க, மோகினியாக மாறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறான். இதுவே கதையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது. எதிர் பாரத திருப்பங்களுடன் இவர்கள் இருவரின் கதை எப்படி முடிவடையும்? 'மோகினி ஆட்டம் ஆரம்பம்' தொடரின் திருப்பங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“