அம்மன் சீரியல் நடிகை அதிர்ச்சி போஸ்… ரசிகர்கள் ஷாக்!

Colors Tamil Amman Serial Update : அம்மன் சீரியல் நடிகை சுபா ரக்ஷா தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Amman Serial Actress Subha Raksha Social Post : தற்போதைய காலகட்டத்தில் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கே ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதனை தக்கவைத்துக்கொள்ளும் அளவுக்கு சீரியல் நடிகைகளும் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் தங்களை நிலைநட்டிக்கொள்கின்றனர். இதில் சில நடிகைகளை கவர்ச்சி ஆயுதங்களை கையில் எடுக்கும் நிகழ்வும் அரங்கேறி வருகிறது.

அந்த வகையில் சின்னத்திரை நடிகை ஒருவர் சமீபத்தில் வெளியிட்ட அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் சீரியல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தொலைக்காட்சிகளில் ஒன்று கலர்ஸ் தமிழ். தமிழகத்தில் கடவுள் பற்றிய சீரியல்  திரைப்படங்களுக்கு மக்கள் அதிக வரவேற்பு கொடுப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில்,இந்த தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் அம்மன் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகிறது.

பவித்ரா கௌடா அமல்ஜித் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியலில், ஜெனிஃபர்,அவினாஷ், சுபா ரக்ஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதில் காநதாரி என்ற கதாப்பத்திரத்தில் நடித்து வருபவர் சுபா ரக்ஷா. கர்நாடகத்தை சேர்ந்த இவர் கன்னடத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக உள்ளார். தமிழில்  அம்மன் சீரியல் மூலம் எண்ட்ரி கொடுத்துள்ளார். எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில்,  ஆடையே அணியாமல், ஒரு தொப்பியுடன் போஸ் கொடுத்துள்ளார். இந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil colors tv amman serial actress subha raksha viral post in social

Next Story
புகார் கூறிய ரசிகர் : சிவாங்கி சொன்ன பதில் என்ன?Cook with comali Sivaangi Tamil News: FAN 'REGISTERS' COMPLAINT WITH SIVAANGI
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express