scorecardresearch

அபியுடன் மோதும் கார்ப்பரேட் அசோக்… கலர்ஸ் தமிழ் புது சீரியலுக்கு தேதி குறிச்சாச்சு!

Colors TV Serial : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் ஜூலை 19-ந் தேதி முதல் அபி டெய்லர் சீரியல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அபியுடன் மோதும் கார்ப்பரேட் அசோக்… கலர்ஸ் தமிழ் புது சீரியலுக்கு தேதி குறிச்சாச்சு!

Tamil Colors TV New Serial Abi Taylor Update : மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அபி டெய்லர் தொடர் வரும் ஜூலை 19 முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ள கலர்ஸ் தமிழ் டிவி, இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரம் ஆனா அசோக்கை அறிமுகப்படுத்தும் புதிய ப்ரோமோவை தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுது போக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்  புதிதாக அபி டெய்லர் என்ற தொடர் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த சில நாட்களாக இந்த தொடரின் ப்ரமோக்கள் வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான இந்த தொடரின் 3-வது ப்ரமோ மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இம்மாதம் 19-ந்தேதி முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவ்விருக்கும் இத்தொடரின் முக்கிய கதாபாத்திரமானா அசோக்கை இந்த ப்ரோமோவில் அறிமுகப்படுத்தியது.

இந்த ப்ரோமோ திறமையான மற்றும் அழகான தோற்றமுடைய ஹீரோ அசோக்கை ஒரு கார்ப்பரேட் நிறுவன பின்னணியில் அறிமுகப்படுத்துகிறது. அங்கு அவருக்கும் அபிக்கும் இடையில் ஒரு சிறிய மோதல் உருவாகிறது. இது கதை ஓட்டத்தை விறுவிறுப்பாக்கப் கொண்டு செல்கிறது. இதுவரை அபி டெய்லர் சீரியலுக்காக வெளியிடப்பட்டுள்ள 3 ப்ரோமோக்களும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த சீரியலை வரும் 19-ந்தேதி ஒளிபரப்பப் போவதாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சீரியலுக்கான ப்ரமோவை பார்த்து சீரியலுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil colors tv new serial abi taylor telecast on july 19th