Advertisment

பிரபல நடிகரின் கால் கட்டை விரல் அகற்றம்: அவருக்கு என்ன ஆனது?

தமிழ் நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணனின் கால் கட்டை விரல் அகற்றப்பட்டது.

author-image
WebDesk
Jun 15, 2023 08:01 IST
Bava Lakshmanan suffering from diabetes

நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன்

நடிகர் வடிவேலு, சந்தானம் உள்ளிட்டோருடன் காமெடியாக நடித்து புகழ்பெற்றவர் பாவா லட்சுமணன். இவருக்கு அண்மையில் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

Advertisment

இதனால் அவர் சென்னை ஓமந்துரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சர்க்கரை நோயின் தாக்கம் காரணமாக அவரது கால் கட்டை விரலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.

அண்மையில் பாவா லட்சுமணனுக்கு உடல் நிலை தீவிரமாக மோசமானது. அவரது காலில் வேறு அடிபட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரத் மரணித்துவிட்டதாக செய்திகள் உலாவின.

கண்ணீர் அஞ்சலி நோட்டீஸும் ஓட்டப்பட்டது. இதையெல்லாம் பார்த்து வேதனை தெரிவித்த பாவா லட்சுமணன், “சுகர் மாத்திரை வாங்க காசு இல்லை. இந்த நேரத்தில் இப்படி செய்கிறார்கள்.

இதனைப் பார்த்து சந்தானம் உள்ளிட்ட பலர் என்னை தொடர்பு கொண்டு விசாரித்தார்கள். ஆனால் வடிவேலு பேசவில்லை” என்றார். பாவா லட்சுமணன் தனியாகவும் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார்.

நடிகர்கள் மம்முட்டி, முரளி, அப்பாஸ் நடிப்பில் வெளியான ஆனந்தம் படத்தில் பாவா லட்சுமணன் தனியாக காமெடி செய்திருப்பார். இந்தக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Diabetes #Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment