Tamil Comedy Actor Bala Saravanan Weight Less Photo : தமிழ் சினிமாவில் பிரபலமாக காமேடி நடிகராக வலம் வரும் நடிகர் பால சரவணன். தனது உடல் எடையை கனிசமாக குறைந்து மெலிந்த நிலையில் உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் கள்ளிக்காட்சி பள்ளிக்கூடம், கனாகாணும் காலங்கள் உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பால சரவணன்.கடந்த 2013-ம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டிப்புலி திரைப்படத்தில், ப்பபு என்ற கேரக்டரின் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அந்த படத்தில் நடிகை லட்சுமி மேனனனை காதலிப்பதற்காக இவர் செய்யும் சேட்டைகள் பெரும் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து, ஈகோ, பன்னையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், கோ 2 கவலை வேண்டாம், ஒருநாள கூத்து, ஈஸ்வரன், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம், தண்ணி வண்டி, ப்ளான் பண்ணி பண்ணணும், உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த பால சரவணன் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சிபி சக்ரவர்த்தி இயக்கும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா, சூரி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரிலும் நடித்து வருகினறனர்.
இந்நலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பால சரவணன் மிகவும் குணடாக இருந்தார். இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆனால் தற்போது இவர் தனது உடல் எடையை கனிசமாக குறைந்துள்ள புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் 2019-ம் ஆண்டு தான் குண்டாக இருந்த புகைப்படத்தையும், தற்போது 2022-ம் ஆணடு தான் உடல் மெலிந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
Started Dieting in Dec 2020 and lost 22kgs in Mar 2021…Thank u Mithran Bro…மகிழ்ச்சி🙏🏾🙏🏾🙏🏾 pic.twitter.com/MLEWyVPqK3
— Bala saravanan actor (@Bala_actor) January 9, 2022
மேலும் 2020- டிசம்பரில் டயட் தொடங்கி மார்ச் 2021-வரை 22 கிலோ எடை குறைந்துள்ளேன். நன்றி மித்ரன் ப்ரோ மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பால சரவணன அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டார் என்று கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகினறனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil