சிரிக்காமல் இருந்து பரிசு வாங்கிய புகழ் : அதுவும் இத்தனை லட்சமா?

Tamil Reality show : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 2 சீசன்களிலும்  தனது சிறப்பான காமெடியின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் புகழ்

Cook With Comali Pughal Update : தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமாக படங்களை கைவசம் வைத்துள்ள குக் வித் கோமாளி புகழ் 6 மணி நேரத்தில் 25 லட்சம் சம்பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் விஜய் டிவியின் மூலம் பல நடிகர்கள் வெள்ளித்திரையில் கால்பதித்துள்ளனர். இதில் சமீபத்திய புதுவரவாக வெள்ளித்திரையில் அதிக படங்களில் நடித்து வருபவர் புகழ். விஜய் டிவியின் ஹிட் ரியாலிட்டி.ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 2 சீசன்களிலும்  தனது சிறப்பான காமெடியின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட புகழ் இதன் மூலம்  படவாய்ப்பு அதிகம் பெற்று வருகிறார். தற்போது பீஸ்ட், வலிமை, அருண்விஜய் 33, விஜய் சேதுபதி 46, சபாபதி, என்ன சொல்ல போகிறாய் என பல படங்களில் நடித்து வருகிறார்.

ஆனாலும் திரைப்படங்களுக்கு இடையில் டிவி காமெடி ஷோக்களிலும் பங்கேற்று வரும் புகழ், ஒரு ஷோவில் பங்கேற்று 6 மணி நேரத்தில் ரூ 25 லட்சம் சம்பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகான வலம் வந்த விவேக் கடைசியாக பங்கேற்ற ரியாலிட்டி ஷோ லொல் எங்க சிரிங்க பார்போம். மிர்ச்சி சிவாவுடன விவேக் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், பவர் ஸ்டார் சீனிவாசன், ஹார்த்தி, பிரேம்ஜி அமரன், அபிஷேக் குமார், பாகி, விஜே விக்னேஷ்காந்த், சதீஷ், மாயா, புகழ் உள்ளிட்டோர் காமெடி நடிகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் காமெடியன்கள் சிரிக்கக் கூடாது. மற்றவர்கள் தான் சிரிக்க வேண்டும். காமெடியன்கள் சிரித்தால் அவர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து  பவர்ஸ்டார் சீனிவாசன் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து சதீஷ் குக் வித் கோமாளி புகழ், அபிஷேக் குமார் ஆகியோர் 6 மணி நேரம் சிரிக்காமல்  பரிசுத் தொகை ரூ.25 லட்சத்தையும் வென்றுள்ளனர். காமெடி ஷோவான இதில், தான் சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்க வைத்த புகழ் 25 லட்சம் பரிசுத்தொகை பெற்றார்.  இந்த ஷோ சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil comedy actor pugal earn 25 lakhs with 6 hours

Next Story
செம்பருத்தி சீரியலில் இருந்து முக்கிய நடிகை விலகல்… புதிய எண்ட்ரியாகும் விஜய்டிவி நடிகை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com