வடிவேலு காம்போவில் கலக்கிய ‘இன்ஸ்பெக்டர்’ காளிதாஸ் மரணம்

Tamil Cinema Update : தமிழ் திரையுலகின் காமெடி மற்றும் துணை நடிகர் வி.காளிதாஸ் இன்று மரணமடைந்தார்.

Actor V.Kalidass Passed Away : வடிவேலுவுடன் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் வி.காளிதாஸ் இன்று மரணமடைந்தார்.

கொரோனா தொற்று பாதிப்பு தமிழ் திரையுலகை வெகுவாக பாதித்துள்ளது. ஊரடங்கு காரணமாக ஒருபுறம் தியேட்டர்கள் திறக்கப்படாததால், புதிய படங்கள் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மறுமுனையில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மரணமடைந்து வருகின்றனர். இதில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியின் உட்பட பல நட்சத்திரங்கள் 2021-ம் ஆண்டை கறுப்பு ஆண்டாக நினைக்கும் அளவுக்கு மரணத்தை தழுவியுள்ளனர்.

அந்த வகையில் தற்போது காமெடி மற்றும் வில்லன் நடிகர் வி. காளிதாஸ் இன்று மரணமடைந்துள்ளார்.  தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்த நடிகர் காளிதாஸ் மரணமடைந்துள்ளார். கடந்த 2004-ம ஆண்டு அருண்விஜய் நடிப்பில் வெளியான ஜனனம் திரைப்படத்தில் வடிவேலுவுடன் இவர் நடித்த காமெடி காட்சிகள் மற்றும் பிறகு படத்தில் வடிவேவுடள் சுடுகாடு காமெடிகள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதே போல் பல படங்களில் காமெடி மற்றும் துணைநடிகராக நடித்துள்ளார்.

வில்லன் கதாபாத்திரங்களுக்கும் பெயர் பெற்ற நடிகர் காளிதாஸ்,  சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘சூலம்’ என்ற தொடரில் கோட்டைச்சாமி என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவரது மரணம பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரைத்துறையினர் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil comedy and villain actor v kalidass passed away

Next Story
முடிவுக்கு வந்த 3 ஆண்டு சீரியல்… மொத்தமாக கூடி ‘பை’ சொன்ன நடிகர்- நடிகைகள்!Vijay TV, Vijay TV serial, Eeramaana Rojaave Serial gets end, Eeramaana Rojaave Serial team says good bye, Eeramaana Rojaave Serial, Eeramaana Rojaave, விஜய் ஈரமான ரோஜாவே சீரியல் முடிவுக்கு வருகிறது, குட் பை சொன்ன ஈரமான ரோஜாவே சீரியல் குழு, வெற்றி மலர், பவித்ரா, திரவியம், vettri malar, pavithra, dhraviyam, Eeramaana Rojaave Serial farewell
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com