இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து அறிவித்த சில மணி நேரத்ங்களில், அவரிடம், பேசிஸ்டாக இருக்கும் மோஹினி டேவும் தனது கணவரை பிரிந்துவிட்டதாக அறிவித்ததால் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து அவதூறான கருத்துக்கள் பரவி வரும் நிலையில், தன்னை பற்றி வெளியாகியுள்ள அவதூறான வீடியோக்களை நீக்க வேண்டும் என்று ரஹ்மான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரஹமான், கடந்த 1992-ம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாரளாக அறிமுகமானார். தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் பல படங்களுக்கு இசைமைத்துள்ள ஏ,ஆர்.ரஹ்மான், ஒரே படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்ற தமிழர் என்ற சிறப்பியும் பெற்றுள்ளவர்.
1995-ம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கத்திஜா, அமீன் உட்பட 3 பிள்ளைகள் உள்ள நிலையில், நேற்று (நவம்பர் 19) சாய்ரா பானு தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அறிவித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதன் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு 29 ஆண்டு திருமண வாழ்க்கையை முறித்துக்கொண்டுள்ளனர். இது தொடர்பான தகவல்கள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது.
இதனிடையே ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசிஸ்டாக இருக்கும் மோஹினி டே, தனது கணவரை பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக சமூகவலைதளங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து வதந்திகள் மற்றும் அவதூறாக கருத்துக்கள் பரவத்தொடங்கியுள்ளது. இது குறித்து பிரபலங்கள் பலரும் ஏ.ஆா.ரஹ்மான் கன்னியமானவர் என்று பதிலடி கொடுத்தாலும், அவர் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே நேற்று ஒரு பதிவை வெளியிட்ட ஏ,ஆர்.ரஹ்மான் மகன் அமீன், எனது அப்பா ஒரு லெஜண்ட், பண்பு அன்பு திறமை அனைத்திலும் லெஜண்ட். ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்து தெரிவிக்கும்போது உண்மையும் மரியாதையும் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனிடையே தன்னை பற்றி வெளியாகியுள்ள அவதூறு கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பான நோட்டீஸில், தனது விவாகரத்து தொடர்பாக உண்மைக்கு புறம்பான அவதூறான தகவல்களை கொண்ட சமூகவலைதள பதிவுகள், செய்தி கட்டுரைகள், யூடியூப் வீடியோக்கள், உள்ளிட்ட பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும். அவ்வாறு நீக்காவிட்டால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.