திலீப் குமார் என்ற இந்துவாக பிறந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இஸ்லாம் மத்திற்கு மாறியது ஏன் என்பது குறித்து பல வருடங்களுக்கு முன்பு கூறிய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1992-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ந்து தனது இசையால் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் 2, பத்து தல, சமீபத்தில் வெளியான மாமன்னன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியா சார்பில் 2 ஆஸ்கார் விருதுகளை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றுள்ளார்.
1967-ம் ஆண்டு இந்துவாக பிறந்து திலீப் குமார் என்ற பெயரில் வளர்ந்த இவர், கடந்த 1980-ம் ஆண்டு இஸ்லாமிய நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு தன்னை இஸ்லாமிய மதத்திற்கு அர்பணித்துக்கொண்டு தனது பெயரை ஏ.ஆர்.ரஹ்மான் என்று மாற்றிக்கொண்டார். இது தொடர்பாக கடந்த 2000-ம் ஆண்டு பிபிசியில் கரண் தாப்பருடன் நடைபெற்ற, பேட்டியின் போது, இந்த ஆன்மீகப் பாதை எங்களுக்கு அமைதியைக் கொடுத்தது" என்று தான் இஸ்லாத்தைத் தழுவியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
எனது அப்பா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு சூஃபி அவருக்கு சிகிச்சை அளித்து வந்தார். 7-8 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் அவரை மீண்டும் சந்தித்தோம், அப்போதுதான் எங்களுக்கு அமைதியைக் கொடுத்த மற்றொரு ஆன்மீக பாதையை அவர் காட்டினார். அதே சமயம் அப்போது வளர்ந்து வந்த ரஹ்மான் தனது தாய் இந்துவாக இருந்தாலும், தனது வீட்டில் எப்போதும் மற்ற மதங்களின் புகைப்படங்களையும் வைத்திருந்துள்ளார்.
நான் இஸ்லாமிய மதத்தை பின்பற்றி வந்தாலும் எனது அம்மா இந்து மதத்தை பின்பற்றி வந்தார். அவர் எப்போதும் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டிருப்பவர். நாங்கள் வளர்ந்த ஹபிபுல்லா சாலை வீட்டின் சுவர்களில் இந்து மத படங்களுடன் அன்னை மரியாள் இயேசுவை தன் கரங்களில் தாங்கியிருக்கும் படமும், மக்கா மற்றும் மதீனாவின் புனிதத் தலங்களின் புகைப்படமும் இருந்தது என்று கூறியுள்ளார்.
நம்பிக்கையில் ஏற்படும் மாற்றம் மற்றவர்களுடனான உறவை பாதிக்காதா என்ற கேள்விக்கு பதில் அளித்த ரஹ்மான், எங்களை சுற்றியிருந்த யாரும் உண்மையில் இது பற்றி கவலைப்படவில்லை. நாங்கள் இசைக்கலைஞர்களாக இருந்ததால் எங்களுக்கு அதிக சமூக சுதந்திரமும் இருந்ததது. இதனால் எங்களுக்கு பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை. அதே சமயம் நான் இஸ்லாமிய மதத்திற்கு மாறியிருந்தாலும் என் பெயரை நான் விரும்பவே இல்லை. மாபெரும் நடிகர் திலீப் குமாருக்கு அவமரியாதை செய்யும் வகையில் இருக்கும் என்பதால், அந்த பெயருக்கு என் உருவரும் பொருந்தவில்லை என்பதால் மாற்றிவிட்டேன் என்று கூறியுள்ளார்.
அதேபோல் ஒரு இந்து ஜோதிடர் தான் எனக்கு ரஹ்மான் என்ற பெயரை வைத்தார். தனது மதமாற்றத்திற்கு பின் எனது குடும்பத்தினர் தங்கையின் ஜாதகத்துடன் ஜோதிடரிடம் எடுத்துச் சென்றபோது எனது பெயரை மாற்றும்படி கேட்டேன். அப்போது ஜோதிடர் அப்துல் ரஹ்மான் மற்றும் அப்துல் ரஹீம் ஆகிய பெயர்களை சொன்னார். இதில் ரஹ்மான் என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு இந்து ஜோதிடர்தான் எனக்கு முஸ்லீம் பெயரைக் கொடுத்தார், ”என்று அவர் நினைவு கூர்ந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.