Advertisment
Presenting Partner
Desktop GIF

6 முறை மிஸ்ஸிங்... லதா மங்கேஷ்கருடன் டூயட் பாட விரும்பிய ஏ.ஆர்.ரஹ்மான் : நடந்தது எப்போது?

'லுகா சுப்பி' பாடல் ரங் தே பசந்தி படத்திற்காக இசையமைக்கவில்லை என்றாலும், இந்த படத்தில் இருந்த அந்த பாடல் வெற்றிப்பாடலாக அமைந்தது என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
ar rahman

ரங் தே பசந்தி படத்தின் லுகா சுப்பி பாடலை லதா மங்கேஷ்கர் பாடினார்

ரங் தே பசந்தி படத்தில் இடம் பெற்ற லூகா சுப்பி பாடலை நான் இந்த படத்திற்காக உருவாக்கப்பட்டது இல்லை என்றாலும், லதா மங்கேஷ்கருடன் பாட வேண்டும் என்பதற்காக இந்த பாடலை வைத்ததாகவும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

Advertisment

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான். தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் இந்தி சினிமாவிலும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இந்தியாவுக்காக 2 ஆஸ்கார் விருதுகள் வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றுள்ள ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 2006-ம் ஆண்டு இந்தியில் வெளியான ரங் தே பசந்தி என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார்.

அமீர்கான், மாதவன், சித்தார்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், இந்தி திரையுலகில் சிறந்த இசையமைப்புக்காக பாராட்டப்பட்ட படங்களில் முக்கியமான ஒன்றாக அமைந்தது. மேலும் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பலராலும் பாராட்டுக்களை பெற்றிருந்தது.

மேலும் ரஹ் தே பசந்தி படத்தில் இடம் பெற்ற 'ரு பா ரு', 'கல்பலி' மற்றும் 'பாத்ஷாலா' போன்ற பாடல்கள் அவற்றின் தனித்துவமான இசையமைப்புக்காக பாராட்டப்பட்ட நிலையில், படத்தின் உணர்ச்சி மையமாகப் பார்க்கப்பட்ட 'லுகா சுப்பி' பாடல் இந்த படத்திற்காக தயாரிக்கப்பட்டது இல்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். 2011 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், பேசிய ஏ.ஆர். ரஹ்மான் படத்தின் இசை "உற்சாகமாகவும் நவீனமாகவும்" இருக்கிறது. அதனால் "அம்மாவின் அழைப்பைப் பற்றி" ஒரு பாடலைப் பாட முடிவு முவு செய்தேன்.இது குறித்து ராஜீவ் மசந்துடன் பேசினேன்.

ஆனால் "நான் உண்மையில் ஜூலை 4-ம் தேதியில் பிறந்த பாடல் இசையில் வேர் ஹேவ் யூ பீன் மை ப்ளு ஐ சன் (‘Where have you been my blue-eyed son’) என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. இதே மாதிரி ஒரு பாடலை ஏன் படத்துக்கு பண்ணக் கூடாது என்று நினைத்தேன். இந்த படத்தின் உள்ளுணர்வை இந்த பாடல் பிரதிபலிக்கும் என்று நினைத்தேன். அதனால் படத்தின் இயக்குனர் ராகேஷ் (ஓம்பிரகாஷ் மெஹ்ரா) கேட்டபோது “ம்ம்ம்... சரி” என்று சொன்னார். ஆனால் பிரசூன் (ஜோஷி, பாடலாசிரியர்), நிச்சயமாக வொர்க் ஆகாது என்று கூறினார். அதன்பிறகு தான் ‘லுக்கா சுப்பி’ பாடல் வந்தது என்று கூறியுள்ளா.

Rang De Basanti
ரங் தே பசந்தி படத்தின் லுகா சுப்பி பாடலை லதா மங்கேஷ்கர் பாடினார்

மேலும் இந்த பாடலை லதா மங்கேஷ்கருடன் இணைந்து பாட விரும்புவதாக கூறியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், இதற்கு முன்பு, 6 முறை லதா மங்கேஷ்கருடன் பாடும் வாய்ப்பு நழுவிப்போனது. ஆனாலும் “நான் லதா மங்கேஷ்கருடன் ஒரு டூயட் பாட முயற்சித்தேன், இது நான் நீண்ட காலமாக செய்ய விரும்பினேன். அதற்கு முன்பு 6 முறை தோல்வியடைந்த நான் இந்த முறை வெற்றி பெற்றுவிட்டேன். இந்த பாடலில் லதா மங்கேஷ்கருடன் இணைந்து பாடினேன்.

ஆனால் ‘லூகா சுப்பி’ ஒரு பின்னணிப் பாடல், மேலும் அந்த பாடல் படத்தில் எந்த இடத்தில் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று கண்டுபிடிக்க சில மணி நேரங்கள் ஆனது என்று படத்தில் பாடல் சரியாக வொர்க் ஆகும் என்று கண்டுபிடித்து இறுதியாக வஹீதா ரஹ்மான் நடித்த ஆர் மாதவனின் கேரக்டர் இறக்கும்போது அவரது தாயார் வஹீதா ரஹ்மான் உடைந்து போவதுதான் ‘லூகா சுப்பி’க்கு சரியான தருணம் என்பதை உணர்ந்து அந்த இடத்தில் வைத்ததாக கூறியுள்ளார்.

படத்தின் 10 ஆண்டு நிறைவு விழாவின் போது, ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, லதா மங்கேஷ்கர் குறித்து கூறுகையில், படத்தில் லூகா சுப்பி பாடலை நான்கு நாட்கள் ஒத்திகை பார்த்து லதா மங்கேஷ்கர் எட்டு மணி நேரம் மைக்கில் நின்று பதிவு செய்ததாகவும் பகிர்ந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ar Rahman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment