இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக முன்பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக தன் மீது புகார் அளித்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 26 முதல் 30-ந் தேதி வரை நடைபெற இருந்த அறுவை சிகிச்கை நிபுணர்கள் மாநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக ஒப்புக்கொண்டு முன்பணமாக 29.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதி கிடைக்காத காரணத்தினால் இந்த மாநாடு நடத்தப்படவில்லை.
இதனால் இசை நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்ட நிலையில், வாங்கிய முன்பணத்தை திரும்பி தருமாறு அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது. ஆனாலும் பணத்தை ஏ.ஆர்.ரஹ்மான் திருப்பி கொடுக்காத நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று தருமாறு கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த புகாரை ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்க மறுத்துள்ள நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை சங்கத்தின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த நோட்டீஸ்க்கு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ள ஏ,ஆர்.ரஹ்மான், அறுவை சிகிச்சை நிபுணர் சங்கத்தினர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது. என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கொடுத்தாக கூறும் பணத்தை நான் பெறவில்லை. 3-வது நபரிடம் பணத்தை கொடுத்ததோடு தேவையில்லாமல் என் பெயரை பயன்படுத்தியுள்ளனர்.
இந்த நோட்டீசை 3 நாட்களுக்குள் திரும்ப பெற வேண்டும். மேலும் என் பெயருக்கும் புகழுக்கும் கலங்கம் ஏற்படுத்தியதற்காக 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு ரூ10 கோடி மான நஷ்டஈடு கொடுக்க வேண்டும். தவறினால் சட்டப்படி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். ஏ,ஆர்.ரஹ்மானின் வழக்கறிஞர் நர்மதா சம்பத் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கடந்த மாதம் 10-ந் தேதி சென்னை ஈ.சி.ஆரில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமாக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதால் அளவுக்கு அதிகமாக கூட்டம் வந்து டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியில் பார்க்க முடியாமல் வீடு திரும்பியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது டிக்கெட் இருந்தும் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போனவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுத்து வரும் நிலையில், மீண்டும் ஏ,ஆர்,ரஹை்மான் சர்ச்சையில் சிக்கியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.