Advertisment

‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குனரின் அடுத்த படம் : ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக அறிவிப்பு

பாலிவுட்டில் தயாரான தி கேரளா ஸ்டோரி படம் பெரும் சர்ச்சை மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 5-ந் தேதி வெளியானது.

author-image
WebDesk
Jun 11, 2023 17:25 IST
ARR Sud

சுதிப்டோ சென் - ஏ,ஆர்,ரஹ்மான்

சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான தி கேரளா ஸ்டோரி படத்தை இயக்கிய இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கும் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

பாலிவுட்டில் தயாரான தி கேரளா ஸ்டோரி படம் பெரும் சர்ச்சை மற்றும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 5-ந் தேதி வெளியானது. அடா சர்மா, சித்தி இதானி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் கேரளாவை சேர்ந்த இந்து பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளில் சேர்த்து விருவதாக திரைக்கதை அமைக்கப்பட்டதற்கு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கபபட்ட நிலையில்,  உத்திரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது.

மேலும் மேற்குவங்கத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தென்னிந்தியாவில் கடுமையாக விமர்சனங்களை சந்தித்த இந்த படம் இந்தி பேசும் மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றதாகவும், படம் ரூ 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த படத்தை இயக்கிய சுதிப்டோ சென் தற்போது தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார்.

இந்த படத்திற்கு சஹாரா இந்தியா பர்வார் நிறுவனத்தை உருவாக்கிய சுப்ரதா ராயின் வாழ்க்கை வரலாற்று படமாக இந்த படத்திற்கு ‘சஹாராஸ்ரீ’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிடப்பட்டது. லெஜெண்ட் ஸ்டூடியோஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#Ar Rahman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment