Advertisment

ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 எப்போது? கோவையில் ஜி.வி.பிரகாஷ் பேட்டி

ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 வை எதிர்பார்த்து வருகிறேன். பேசிருகாங்க. நானும் வெயிட் பன்றேன்.

author-image
WebDesk
New Update
GV Prakash

ஜி.வி.பிரகாஷ்

கோவை பந்தய சாலையில் உள்ள தாஜ் விவண்டா ஹோட்டலில்  பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி பிரகாஷ் குமார் லைவ் இன் கான்செர்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

முதல் கான்செட் கோவையில் நடத்துகிறோம் மகிழ்ச்சி அளிக்கிறது. 2006"ல் இருந்து இசை அமைத்து வருகிறேன். 98 இசை முடிந்து 100 வரை வந்துவிட்டேன். கோவையில் நடைபெறும் லைவ் நிகழ்வு தரமான நிகழ்வாக இருக்கும். ரெக்கார்டிங்கில் இருந்து லைவாக பண்ணுவது எதிர்பார்பாக உள்ளது.

படத்தில் வரும் பாரம்பரிய இசை போன்ற இசைகளை கதைதான் முடிவு செய்யும். ஆயிரத்தில் ஒருவன் படம் போன்ற இசைகள் உள்ளது. லைவ் நிகழ்வில் சத்திய பிரகாஷ் ,ஹரிணி, ஸ்வேதா மோகன்,மாளவிகா போன்ற பாடகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்வில் 40-45 பாடல்கள் பாடப்பட உள்ளன. லைவ்வில் சினிமாவில் கேட்டதை விட சிறப்பு இருக்கும்.

ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2 வை எதிர்பார்த்து வருகிறேன். பேசிருகாங்க.நானும் வெயிட் பன்றேன். ரஜினி சார் பண்ணாத படமும் இல்லை, கமல் சார் பண்ணாத படமும் இல்லை சிகப்பு ரோஜா போன்ற படங்களும் உள்ளது.சிவப்பு மஞ்சள் பச்சை குடும்ப படம், டார்லிங் படம் போன்றவை டிவியில் பிளே பேக் ஆன படம்.

ரிபெல் திரைப்படம் அரசியல் சார்ந்த படம். ஆர்டிஸ்டாக இப்படித்தான் படம் செய்ய வேண்டும் என்ற எந்த வரைமுறையும் இல்லை. அனைத்து  படமும் பண்ன வேண்டும். லைவ் கான்செர்ட் பன்னுவது ஒரு குவாலிட்டி மேஜிக். செலிபரேசன் ஆப் லைப்பை ப்ரமோசன் பன்னுவோம். இந்த நிகழ்வுக்கு நடிகர் ஆர்யா வருவதாக தெரிவித்தார். நீங்கள் மகிழும்படியாக பர்வார்மன்ஸ் இருக்கும்.

ஜல்லிகட்டு தீர்புக்கு முதலில் ட்விட் செய்து இருந்தேன். இளைஞர்களால் ஜல்லிகட்டு போராட்டம் கருத்து வேறுபாடு இல்லாமல் நடந்தது.தற்போது வந்த ஜல்லிகட்டு தீர்ப்பு கூஸ்பாம் மூமண்ட் ஆக இருந்தது. நான் நான் தான்.ஏ ஆர்.ரகுமான் லெஜண்ட்.நான் இப்பதான் வளர்ந்து வருகிறேன். ரகுமான் போன்று யாரையும் வைத்து கம்பேர் பண்ன கூடாது. கோவையில் அதிகபட்சமாக தமிழ் பாடல்கள் பாடுவோம்.

இசையமைப்பாளர் வரி தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம் என இவ்வாறு தெரிவித்தார். திரைப்பட இயக்கத்திற்கு 2 வருடம் நேரம் செலவழிக்க வேண்டும். அந்த நேரம் இப்ப எனக்கு இல்லை. ஆனால் ப்ரொடியூஸ் செய்கிறேன் என தெரிவித்து யாத்தி யாத்தி பாடல் பாடினார்.

பி.ரஹ்மான் கோவை  மாவட்டம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gv Prakash
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment