/indian-express-tamil/media/media_files/2025/09/25/gv-prakash-mh-2025-09-25-14-47-00.jpg)
குழந்தையை சைந்தவி கவனித்துக் கொள்வதில் ஆட்சேபனை: குடும்ப நல கோர்ட்டில் ஜி.வி. பிரகாஷ்
கடந்த 2006-ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகனான இவர், தொடர்ந்து பொல்லாதவன், ஆடுகளம், தெறி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் வாத்தி படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் தேசிய விருதை வென்றிருந்தார்.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், மதயானை கூட்டம் என்ற படத்தை தயாரித்த ஜி.வி.பிரகாஷ், 2015-ம் ஆண்டு வெளியான டார்லிங் என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தொடர்ந்து அடியே, நாச்சியார் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஜி.வி.பிரகாஷ் தற்போது இசை நடிப்பு என பிஸியான இருந்து வருகிறார். பல படங்களை கைவசம் வைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் கடந்த 2013-ம் ஆண்டு சைந்தவி என்ற பாடகியை திருமணம் செய்துகொண்டார்.
அந்நியன் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான சைந்தவி கடைசியான மார்க் ஆண்டனி என்ற படத்தில் பாடியிருந்தார். ஜி.வி – சைந்தவி இருவருக்கும் திருமணமாகி 9 வருடங்கள் கடந்துள்ள நிலையில், சமீபத்தில் இருவரும் விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் தங்கள் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெற விரும்புவதாக, ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், இரு தரப்பின் கருத்துக்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பு செப்.30-ந் தேதி அறிவிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார். இதில் குழந்தையை சைந்தவி கவனித்துக் கொள்வதில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் நீதிபதி முன் தெரிவிருந்தார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, விவாகரத்து கோரிய வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவருக்கும் பரஸ்பர விவாகரத்து வழங்கப்படுவதாக சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.