இசையமைப்பாளர் இளையராஜா பாடல் காப்புரிமை தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இளையராஜா தனது பாடல்களுக்கு உரிமைகோர முடியாது எனறு எக்கோ நிறுவனம் நீதிமன்றத்தில் கூறியள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் பின்பற்றும் நடைமுறையைப் போல் இல்லாமல்., இசையமைப்பாளர் இளையராஜா 1970 – 1990 களின் நடுப்பகுதியில் தான் இசையமைத்த சுமார் 4,500 திரைப்படப் பாடல்களுக்கான பதிப்புரிமையைத் தக்கவைத்துக்கொள்ளவில்லை. எனவே, அந்தப் பாடல்கள் மீது அவர் எந்த உரிமையையும் கோர முடியாது என்று எக்கோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
பாடல் காப்புரிமை தொடர்பான இளையராஜா தொடர்ந்துள்ள வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன், நடந்த இந்த விசாரணையில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், இளையராஜா உண்மையில் தனது பாடல்களுக்கான உரிமைகளைத் தக்கவைத்திருந்தால், அந்த ஒப்பந்த உடன்படிக்கைகளை நீதிமன்றத்தின் முன் சமர்பிப்பதன் மூலம் அதை நிரூபிக்க அவருக்கு ஆதாரம் இருக்கும், ஆனால் விசாரணையின் போது அவ்வாறு செய்யத் தவறிவிட்டதாக கூறியுள்ளார்.
மேலும் இசையமைப்பாளர்கள் இசையமைத்த பாடல்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படாத பட்சத்தில் அவர்களின் காப்புரிமையின் முதல் உரிமையாளர் திரைப்பட தயாரிப்பாளர்கள்தான் என்பதை 1957 ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டம் தெளிவுபடுத்துகிறது. “எனக்கு ஏ.ஆர். ரஹ்மான் பதிப்புரிமையைப் பிரிப்பதில்லை. இப்போது, பெரும்பாலானவர்கள் இதைத்தான் செய்கிறார்கள். அந்த நாட்களில், இந்த கருத்து இல்லை, எனவே இளையராஜா எந்த உரிமையையும் தக்க வைத்துக் கொள்ளவில்லை, ”என்றும் கூறியுள்ளார்.
ஒரு திரைப்பட தயாரிப்பாளரால் பணியமர்த்தப்பட்ட ஒரு இசைக்கலைஞர் காப்புரிமையைத் தக்கவைக்காமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். “சில சமயங்களில், ஒரு இசைக்கலைஞர் தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருக்கும்போது, பணத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான தேவை அதிகமாக இருக்கலாம். மேலும் வளரும் இசையமைப்பாளர் ஒரு சிறிய தொகையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம், ஆனால் இந்த விஷயத்தில், இளையராஜா அப்பார்ப்பட்டவர். அவருக்கு நன்றாகவே சம்பளம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
4,500 பாடல்களுக்கான காப்புரிமையை மேல்முறையீடுதாரர் பல்வேறு திரைப்பட தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கியிருந்தாலும், 2019 இல் உயர்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி, இளையராஜா இன்னும் அந்த இசையமைப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று தவறாகக் கூறியிருந்தார். ஒரு தயாரிப்பாளருடன் சேவை ஒப்பந்தத்தின் கீழ் பணிபுரிந்திருக்க முடியாது என்று கூறும் வகையில், இசையமைப்பாளரின் தற்போதைய அந்தஸ்தினால் பதிப்புரிமை வாங்கியிருக்கலாம் என்றும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
“சட்டத்தின் பார்வையில் அனைத்து மக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஒருவேளை, இதுதான் (ஒற்றை நீதிபதியின் அவதானிப்பு) எனது கற்றறிந்த நண்பர் (மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன்) இளையராஜா எல்லாவற்றிற்கும் மேலானவர் என்று சொல்ல வழி செய்தது. ஆனால், ஒருவர் நீதிமன்றத்திற்கு வந்தவுடன் அடுத்தவருக்கு சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே உண்மை. குறிப்பாக வணிக பரிவர்த்தனைகளுக்கு யாரும் சிறப்பு அந்தஸ்து கோர முடியாது,” என்று நாராயண் என்பவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், தியாகராஜருடன் கர்நாடக இசையின் மும்மூர்த்திகளாகக் கருதப்படும் முத்துசுவாமி தீட்சிதர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் கூட இசைக்கு முன் தாங்கள் யாரும் இல்லை என்று பிரகடனப்படுத்தியதாக குறிப்பிட்ட தற்காலிக தலைமை நீதிபதி, சிறந்த கிதார் கலைஞர்களில் ஒருவரும், சிறந்த வயலின் கலைஞர்களில் ஒருவரும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டதாகவும், அந்த அறிக்கை ஆன்லைனில் கூட கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
அதன்பிறகு, தனது வாதங்களைத் தொடர்ந்த நாராயண், சர்ச்சைக்குரிய பாடல்களுக்கு ஊதியம் பெற்றதாக இளையராஜா ஒப்புக்கொண்டார், ஆனால் திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தத்தின் கீழ் பணிபுரிந்ததை மட்டும் அவர் மறுத்துவிட்டார், என்று கூறிய நாராயண், “ஒருமுறை அவரது படைப்புகளுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது, பின்னர் தனது அனைத்து உரிமைகளையும் இழக்கிறார் என்று கூறியுள்ளார். இந்த இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள், வழக்கை வரும் ஜூன் 19, 2024 அன்றுஇளையராஜா சார்பில் ஆஜரான பராசரனை விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“