தான் இசையமைத்த தங்கமகன் படத்தில் இருந்து தனது அனுமதி இல்லாமல் கூலி படத்தில் பயன்படுத்தியுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இவர், அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் அவரின் 171-வது படத்தை இயக்க உள்ளார். கூலி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த டீசரில், ரஜினிகாந்த் தான் ரங்கா படத்தில் பேசிய வசனத்தை பேசியிருந்த நிலையில், தங்க மகன் படத்தில் வரும் வா வா பக்கம் வா என்ற பாடலின் ஒரு பகுதி பின்னணியில் ஒலிக்கும் வகையில் அமைந்திருந்தது. இதனிடையே கூலி படத்தின் டைட்டில் டீசரில் தனது அனுமதி இன்றி 'தங்க மகன்' படத்தின் 'வா வா பக்கம் வா' பாடலின் ஒரு பகுதியை பயன்படுத்தியுள்ளதாக கூறி சன் பிக்சர்ஸ் மீது இளையராஜா வழக்குப்பதிவு செய்துள்ளார்.
லோகேஷ் கனராஜ் இயக்கிய 'விக்ரம்' படத்தில் விக்ரம் என்ற பாடல் மற்றும் அவர் வெளியிட்ட 'ஃபைட் கிளப்' படத்தில் ஏஞ்ஜோடி மஞ்சக்குருவி உள்ளிட்ட பாடல்கள் பயன்படுத்தியதை மேற்கோள்காட்டி வழக்கு பதிவு செய்துள்ள இளையராஜா, கூலி படத்தின் டிசரில் இருந்து தனது பாடலை நீக்க வேண்டும் என்றும், அல்லது அந்த பாடலை பயன்படுத்த தன்னிடம் முறையான அனுமதியை பெற வேண்டும் என்றும் தவறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தங்கமகன் படத்தில் ரஜனிகாந்தே நாயகனாக நடித்திருந்த நிலையில், இந்த பாடலுக்கு அவரே நடனமும் ஆடியிருந்தார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், "எங்கள் கிளையண்டின் சில இசைப் படைப்புகள் அவரது முந்தைய படங்களான விக்ரம்-2 (பாடல்-விக்ரம் விக்ரம்.), ஃபைட் கிளப்' (பாடல்-'என் ஜோடி மஞ்சா குருவி') படங்களில் அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“