தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான தற்போது வெளியிட்டுள்ள பதிவில்,"இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊர்களில் நடைபெறும் என்று கூறியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் இசையமைப்பாளர்கள் பலரும் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதில் கடந்த சில சில வருடங்களாக தமிழ்நாட்டிலும் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் கிடைக்கும் வரவேற்பை போலவே தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்களும் இசை நிகழ்ச்சிக்கு பெரிய ஆதரவு அளித்து வருகின்றனர்.
மேலும் தங்களுக்கு பிடித்தமான இசையமைப்பாளரின் இசை நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்று ரசிகர்களும் டிக்கெட்டுகளை போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர். இதனிடையே இதுவரை சென்னையில் மட்டுமே நடைபெற்று வந்த இசை நிகழ்ச்சியை இனி தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்று இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இளைரயாஜா ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
1976-ம் ஆண்டு பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள நிலையில், தனது இசையில் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளளார். இவர் இசையமைப்பில் உருவான பல படங்களில் இசைக்காவும் பாடல்களுக்காகவுமே வெற்றிகளை பெற்றுள்ளது. இசை இளையராஜா என்று இருந்தாலே படம் வியாபாராம் ஆகிவிடும் என்ற நிலை இன்றும் இருக்கிறது.
அதேபோல் அவ்வப்போது இசை நிகழ்ச்சி நடத்தி வரும் இளையராஜா, கடந்த செப்டம்பர் 14-ந் தேதி கும்பகோணத்தில் இசைக்கச்சேரி நடத்தினார். இந்த நிகழ்ச்சியின்பொது மழை பெய்திருந்தாலும், மக்கள் கலைந்து செல்லாமல், இளையராஜாவின் பாடலை கேட்டு ரசித்தனர். இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இதில், பெரும் மழையிலும், என் இசை நிகழ்ச்சியை ரசிக்க வந்த கும்பகோணம் மக்களே, உங்களின் ஆதரவை மறக்கமுடியாது. நன்றி! இனி என் இசை பயணம் தலைநகரில் மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊர்களில் நடைபெறும் எனக் கூறியுள்ளார். இதனால் இளையராஜா ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“