AR Rahman is celebrating his 56th birthday today :இந்தியாவவின் ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 56-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 1992-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான். தொடர்ந்து ஜென்டில்மேன், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, பம்பாய், முத்து, இந்தியன், உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னிணி நடிகர்களுக்கு சிறந்த இசையை கொடுத்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், இந்தி தெலுங்கு ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், பல விருதுகளையும் வென்றுள்ளார். இதில் ஸ்லாம்டாக் மில்லியனர் படத்திற்காக திரைப்படத்துறையின் உயரிய விருதான ஆஸ்கார் விருதை பெற்று இந்திய அளவில் ஆஸ்கார் விருது பெற்ற முதல் தமிழின் என்ற அடையாளத்தை பெற்றார்.
இசை மட்டுமல்லாது பாடல் பாடுவது, பட தயாரிப்பு, எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான இன்று தனது 56-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பான லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எங்கள் சொந்த இசைப்புயலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் இசை புயல்போல் வந்து சரியான நாணில் தாக்கட்டும் என்று பதிவிட்டுள்ளனர்.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில்,
பெரும் வெற்றிகளையும் புகழையும் எளிய புன்னகையால் கடக்கக்கூடிய பண்பாளர். தமிழ் இசையை உலக அரங்கில் கொண்டுசேர்த்து, உலக இசையைத் தமிழிலும் ஒலிக்கச் செய்த இசைத் தமிழர். அன்பிற்குரிய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சாரை அவரின் பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
சன்பிச்சர்ஸ் நிறுவனம் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்த நாள் ப்ரமோவை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நடிகை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பதிவில்,
லெஜண்டிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரஹ்மான் சார். எப்போதும் போல் உங்கள் பாசிட்டீவ் உணர்வை பரப்புங்கள். உங்கள் இசையால் வளர்ந்தது உண்மையான மரியாதை. உங்களைத் தெரிந்துகொண்டு உங்களுடன் பணிபுரிந்ததற்காகத் தாழ்மையுடன் வணங்குகிறேன் என்று கூறியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜாவின் யூ1 ரெக்கார்ட்ஸ் தனது ட்விட்டர் பதிவில்,
எங்கள் ஆஸ்கார் நாயகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மிகவும் அற்புதமாக பிறந்த நாள். மகத்துவம் அமைதி இசை நிரம்பிய ஆண்டு. உங்களை நாங்கள் எப்போதும் எதிர்நோக்குவோம் உங்கள் இசையால் எங்களை ஊக்கப்படுத்துங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
உங்கள் இசை கனவுகள் அனைத்தும் நனவாகட்டும், நீங்கள் சிறந்த தகுதியுள்ள நபர். பிறந்த நாள் வாழ்த்துக்கள் டியர் என்று நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இதேபோல் ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகிறன்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“