Advertisment

'இது மட்டும் முன்கூட்டியே தெரிந்திருந்தால்..': மகள் மீரா பற்றி விஜய் ஆண்டனி மனைவி உருக்கம்

தனது மகளின் மரணம் குறித்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மனைவி வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Vijay Antony Meera

விஜய் ஆண்டனி மகள் மீரா

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த மாதம் திடீரென தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விஜய் ஆண்டனி மனைவி வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில், இசையமைப்பாளர் நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக திறமை கொண்ட விஜய் ஆண்டனி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே கடந்த செப்டம்பர் 16-ந் தேதி விஜய் ஆண்டனி மகள் மீரா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது திடீரென தற்கொலை செய்துகொண்டார்.

மனம் அழுத்தம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்தாக கூறப்படும் நிலையில், அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  மீராவின் மரணம் விஜய் ஆண்டனி குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது மனைவி பாத்திமா தனது மகள் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தனது எக்ஸ் (ட்விட்டர்) மீரா தனது குடும்பத்திற்குத் திரும்ப வேண்டும் என்று விரும்புவதாகவும், இவரது இழப்பு குறித்து எதுவுமு் செல்ல முடியாமல் தவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நீ 16 ஆண்டுகள் மட்டுமே வாழ்வாய் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் உன்னை சூரியன் மற்றும் சந்திரனுக்குக் காட்டாமல் எனக்கு மிக நெருக்கமாக வைத்திருப்பேன், உங்கள் எண்ணங்களில் மூழ்கி நான் இறந்து போகிறேன், முடியாது. நீ இல்லாமல் வாழ முடியவில்லை. அம்மாவிடம் திரும்பி வந்துவிடு பாப்பா என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். தற்கொலை செய்துகொண்ட மீராவுக்கு 16 வயதே ஆன நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அடக்கம் செய்யப்பட்டது.

2005 இல், அவர் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி 2008 ஆம் ஆண்டு வெளியாக காதலில் விழுந்தேன் திரைப்படத்தின்  நாக்க முக்கா பாடலுக்காக சிறந்த இசைப் பிரிவில் கேன்ஸ் கோல்டன் லயன் விருதை வென்ற முதல் இந்திய இசையமைப்பாளர் இவர்தான். 2012ம் ஆண்டு நான் திரைப்படத்தின் மூலம் தனது முதல் திரைப்படத்தை தொடங்கினார். பிச்சைக்காரன் மற்றும் சலீம் போன்ற அதிரடி திரில்லர் படங்களில் நடித்ததற்காக அவர் மிகவும் பிரபலமானவர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment