/indian-express-tamil/media/media_files/0pt14lQje845oFrkQeCV.jpg)
குக் வித் கோமாளி சீசன் 5
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-வது சீசன் நேற்று தொடங்கிய நிலையில், இந்நிகழ்ச்சியில் எந்த கோமாளிக்கு யார் குக்காக வந்திருக்கிறார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், ஏப்ரல் 27-ந் தேதி முதல் 5-வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்க, செஃப் தாமு, மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வந்தனர்.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேஷ் பட் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்க்கு பதிலான மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யாருக்கு யார் ஜோடி என்பது குறித்து வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதில் வரிசையாக பானைகள் வைத்திருக்கும் நிலையில், ஒரு கோமாளி ஒரு பானையை உடைக்க வேண்டும். அதில் இருக்கும் பொருளை வைத்து அவருக்கான குக் யார் என்பது தெரியவரும். அந்த வகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற நடிகர் புகழ், தனக்கு ஒரு நடிகை குக்காக வர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பானையை உடைத்தார்.
முன்னதாக பானையை உடைக்கும் முன், எனக்கு வரும் குக்குடன் கட்டி பிடித்து முத்தம் கொடுப்பேன். அதை பார்த்து யாரும் பொறாமைபட கூடாது என்று கூறிவிட்டு உடைத்தார். ஆனால் அவர் நினைத்ததை விட மாறாக, அவருக்கான குக்காக நடிகர் விடிவி கணேஷ் என்ட்ரி கொடுத்து புகழின் ஆர்வத்தில் இடியை இறக்கினார். அடுத்து குரேஷிக்கு ஷாலின் ஷோயா என்ற மலையாள நடிகை குக்காக வந்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, காமெடி நடிகர் ராமருக்கு, நடிகை யாரும் குக்காக வந்துவிட கூடாது என்று மற்ற கோமாளிகள் வேண்டிக்கொண்ட நிலையில், அவர் உடைத்த பானைக்கு இளம் நடிகை திவ்யா துரைசாமி குக்காக வந்துள்ளார். திவ்யா துரைசாமி சூர்யாவுடன் இணைந்து நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் ராமர் அவருடன் இணைந்து நடித்திருந்தார். அதேபோல் கே.பி.ஒய் வினோத்துக்கு வி.ஜே.பிரியங்கா குக்காக வந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us