Advertisment

திருமண சர்ச்சையில் குக் வித் கோமாளி பிரபலம் : வெளியான புதிய தகவல்

Pugal Secret Marriage Controversy : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற புகழ் ரகசிய திருமணம் செய்துகொண்டாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
Jun 23, 2021 09:54 IST
New Update
திருமண சர்ச்சையில் குக் வித் கோமாளி பிரபலம் : வெளியான புதிய தகவல்

Pughal Secret Marriage Issue : விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சியின் முதல் 2 சீசன்களில் இவர் செய்த அட்ராசிட்டிக்காகவே இவருக்கு ரசிகர்கள் பட்டளம் உருவாகியது. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவுற்றாலும் சமூகவலைதளங்களில் புகழ் குறித்த செய்திகள் நாள்தோறும் வெளியாகி வருகின்றனர். மேலும் இவரின் திறமைக்காக படவாய்ப்புகள் குவிந்து வருகிறது.

Advertisment

மேலும் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விருது வழங்கும நிகழ்ச்சியில் அரை டஜனுக்கும் அதிகமான படங்களில் நடித்து வருவதாக கூறியிருந்தார். குறிப்பாக அருண்விஜய் நடித்து வரும் புதிய படம், விஜய்சேதுபதி படம், மற்றும் அஜித்தின் வலிமை படத்திலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நடிகரான புகழ் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் குறித்து சர்ச்சை தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. புகழ் ஒரு பெண்னை காதலிதது வந்ததாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பெண்னை ரகசிய திருணம் செய்துகொண்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் அந்த பெண் மாற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் திருமணம் ரகசியமான நடைபெற்றதாகவும், இதில் புகழுக்கு மிக நெருக்கமானவர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள் என கூறப்பட்டது.

இந்த தகவல் தற்போது இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள புகழ் நான் சிங்கிள் தான் இப்படிப்பட்ட செய்திகளை பார்த்தால் தனக்கு சிரிப்பு வருகிறது என்றும் கூறி இருக்கிறார். ஏற்கனவே கடந்த இரு தினங்களுக்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சில் பங்கேற்ற அஸ்வின் சிவாங்கி இருவரும் திருமணம் செய்துகொண்டதாக ஒரு வீடியோ மார்பிங் செய்து வெளியிட்ப்பட்டது.

இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வீடியோ உண்மையல்ல என்றும், தான் இப்போது தனது சினிமா வாழ்கையின் தொடங்கத்தில் இருப்பதால் அதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அஸ்வின் கூறியிருந்த நிலையில், சிவாங்கியும் இந்த வீடியோ குறித்து விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Cook With Comali Pughal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment