Advertisment

'இந்த வருடம் என் காதலரை பார்க்க வேண்டும்' : ஷிவாங்கி

பாடல் மட்டுமல்லாது காமெடியும் எனக்கு வரும் என்பதை நிரூபிக்கும் வகையில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார்

author-image
WebDesk
New Update
shivangi, cookku with comali, ஆரஞ்சு மிட்டாய் ஷிவாங்கி, ஷிவாங்கி லேட்டஸ்ட் ஸ்வீட் க்ளிக்ஸ், Shivangi latest Orange Mittay clicks, cookku with Comali

ஷிவாங்கி

தனது பிறந்த நாளை முன்னிட்டு லைவில் ரசிகர்களுடன் பேசிய சிவாங்கியிடம் உன் காதலன் யார் என்று பிரபல நடிகர் கேள்வி எழுப்பிய நிலையில், இந்த கேள்விக்கு சிவாங்கியின் பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

பல திறமையாளர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்த பெருமை பெற்ற விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. பின்னணி பாடகர் கிருஷ்ணகுமாரின் மகளான இவருக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் கிடைக்கவில்லை என்றாலும் இந்த நிகழ்ச்சியில் இவர் பாடும் பாடலுக்கென்று தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.

பாடல் மட்டுமல்லாது காமெடியும் எனக்கு வரும் என்பதை நிரூபிக்கும் வகையில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியில் புகழுடன் இவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், நிகழ்ச்சி முடிந்த பிறகு இவர்களது காமெடி சேட்டைகளை பலர் கண்டு ரசித்து வருகின்றனர்.

கோமாளியாக கலக்கிய சிவாங்கி அடுத்து பாடகி நடிகை என தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார். இதில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான், நாய் சேகர் உள்ளிட்ட சில படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து நடிப்பிலும் முத்திரை பதித்திருந்தார். இதுவரை கோமாளியாக கலக்கிய ஷிவாங்கி தற்போது குக் அவதாரம் எடுத்துள்ளார்.

மேலும், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளி, பின்னணி பாடகி, வளர்ந்து வரும் நடிகை என பல கோணங்களில் பிஸியாக இருந்து வரும் சிவாங்கி சமூகவலைதளங்களிலும் ஆக்டீவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு தனக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக லைவில் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது திடீரென லைவில் வந்த கனா பட நாயகன்,  தர்ஷன்  இந்த பிறந்த நாளில் நீ உன்னுடைய காதலனை சந்திக்க என்னுடைய வாழ்த்துக்கள் என்றும், நீ யாரை காதலிக்கிறாய் என்பதை சொல்லு எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்த ஷிவாங்கி நான் இன்னும் அந்த நபரை பார்க்கவில்லை. இந்த வருடமாவது பார்த்து விட வேண்டும் என்று கூறிய அவர், தன்னுடைய காதலனை தேடிக் கொண்டிருப்பதாக கூறி தனது காதல் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். ஷிவாங்கியின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Shivangi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment