New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Cook-With-Comali.jpg)
குக் வித் கோமாளி சீசன் 4
3 சீசன்களிலும் கோமாளியாக பங்கேற்ற நடிகை சிவாங்கி தற்போது 4-வது சீசனில் குக்காக பங்கேற்று சமையலில் கலக்கி வருகிறார்.
குக் வித் கோமாளி சீசன் 4
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த சிவாங்கி தற்போது குக்காக வந்து கலக்கி வரும் நிலையில், தற்போது அவர் கொடுத்துள்ள அப்டேட் ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில் குக் மற்றும் கோமாளியாக வரும் நட்சத்திரங்கள் காமெடியில் கலக்கி வருகின்றனர். இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்போது 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த 3 சீசன்களிலும் கோமாளியாக பங்கேற்ற நடிகை சிவாங்கி தற்போது 4-வது சீசனில் குக்காக பங்கேற்று சமையலில் கலக்கி வருகிறார். அதே சமயம் இனி வரும் சீசனிகளில் நான் பங்கேற்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் இந்த சீசனில் சிவாங்கியை ஜெயிக்க வைக்க, விஜய் டிவி பல சூழ்ச்சிகளை செய்து வருவதாக வதந்திகள் பரவி வருகிறது.
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கலந்துகொண்டுள்ள பிக்பாகஸ் பிரபலம் ஜூலியும் கலந்துகொண்டுள்ளார். இன்றைய எபிசோட்டில், ஜூலியிடம் சென்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எல்லோருமே இப்படித்தான் கோபமாக நடந்துகொள்வார்களா என்று கேட்கிறார். அதற்கு ஜூலி நீயும் கலந்துகொண்டு பார் அதன் பிறகு தெரியும் என்று சொல்கிறார்.
இதை கேட்ட சிவாங்கி என்னது நானா என்று அதிர்ச்சியடைய, அங்கே வரும் குரேஷி, நீ எல்லாம் கலந்துக்க வெண்டாம் பன்னி அம்மாவை கலந்துக்க சொல்லு என்று சொல்ல எங்க அம்மா அங்கே கலந்துகொள்ளவே வேண்டாம். எங்க அம்மா போன அழுதுடுவாங்க என்று சிவாங்கி சொல்ல, அதெல்லாம் அழுவ மாட்டாங்க அங்க கேசரி செஞ்சு கொடுத்தா அங்க இருக்க எல்லாரும் அழுதுடுவாங்க என்று காமெடியாக பேசிக்கொண்டிருக்கின்றனர்.
இதை பார்த்த ரசிகர்கள் சிவாங்கி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் நன்றாகத்தான் இருக்கும். சிவாங்கியினன் அம்மா கலகலப்பானவராக இருப்பதால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தாராளமாக வராலம் என்று கூறி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.