விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடல்பாடி புகழ்பெற்றவர் சிவாங்கி. தொடர்ந்து சின்னத்திரையின் ஹிட் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்ட அலப்பறை செய்த இவர், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இதன் மூலம் தற்போது சின்னத்திரையின் முக்கிய பிரபலங்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
மேலும் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் டான் படம் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் உங்களை ஹீரோயினாக எப்போது பார்க்கலாம் என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. எனக்கு தகுந்த ஸ்கிரிப்ட் வந்தால் கண்டிப்பாக அது நடக்கும் என்று கூறியிருந்தார்.
தற்போது அடிக்கடி மற்ற சில நிகழ்ச்சிகளில் கெஸ்ட்டாக கலந்துகொள்ளும் இவர், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் சிவாங்கி தற்போது போட்டிருக்கும் ஒர்கவுட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் சிவாங்கி ஸ்ப்ரிங்கை இழுக்க முடியாமல் திணறுகிறார். இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil