ஷிவாங்கி அப்பவே அப்படி… குட்டிப் பொண்ணா இருக்கும்போதே என்னா திறமை பாருங்க!

Tamil Serial Update : குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகை சிவாங்கி தனது அப்பாவுடன் இணைந்து பாடிய பாடல் வீடியோ வைரலாகி வருகிறது.

Cook With Comali Shivangi Singing Video : சின்னத்திரையில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய நடிகை சிவாங்கி சிறுவயதில் தனது தந்தையுடன் இணைந்து பாடல் பாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருபவர் சிவாங்கி. முதலில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான இவர் , சூப்பர் சிங்கர் ‘சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.அடுத்து விஜய் டிவியில் ஹிட் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சில் கோமாளியாக லந்துகொண்டு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த காமெடி அட்ராசிட்டிகள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ஒரு சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் முதன் முதலாக பாடகியாக அறியப்பட்ட சிவாங்கி தனது சிறு வயதில் தனது தந்தையுடன் இணைந்து பாடல் பாடியுள்ளார். அவ்வாறு இவர் தனது தந்தையுடன் இணைந்து பாடல் பாடிய வீடியோ ஒன்று குக் வித் கோமாளி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பார்த்த்து ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cook with comali star shivangi singing song with daddy

Next Story
சன் டிவியில ஒண்னு… விஜய் டிவியில ஒண்னு… DD அக்கா PD ரீ என்ட்ரி!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com