Tamilnadu Covid Update : இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும், வெளியில் செல்லும்போது முககவசம், மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் வேகம் உச்சம் தொட்டு வரும் நிலையில், கொரோனா தொற்றுடன் சேர்ந்து அதன் உருமாறிய வகையான ஒமைக்ரான் தொற்று பரவி வருகிறது.
இதன் காரணமாக இந்தியாவில் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு 4 கோடியை நெருங்கி வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக அரசியல் பிரமுர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகினறனர்.
இந்த பட்டியலில், மூத்த நடிகர் சத்யராஜ், த்ரிஷா, அருண்விஜய், விக்ரம், மீனா குஷ்பு உள்ளிட்ட சில நடிகாகளுக்கும், மத்திய அமைச்சர் ராஜநாத் சிங், கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்பை, பீகார் முதல்வர் நித்திஷ் குமார் உள்ளிட்ட சில அரசியல் பிரலங்களும் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த பட்டியலில் தற்போது புதிதாக நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் பாடகி லதா மங்கேஷகர் உள்ளிட்ட சில பிரபலங்கள் இன்று இணைந்துள்ளனர். இதில் 92 வயதாகும் லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளர்.
முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக என்னை தனிமைபடுத்தி்ககொண்டேன் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால் உடனே செலுத்திக்கொள்ளுங்கள் நான் விரைவில் நலம் பெறுவேன் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ள இந்திய கிரக்கெட் அணி மும்பையில் தனிமப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் தென்ஆப்பிரிக்கா புறப்பட உள்ளனர். இந்நிலையில், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக அவர் இந்திய அணியினருடன் செல்ல முடியாத நிலை ஏற்படடுள்ளது. ஆனாலும் சிகிச்சைக்கு பின் வாஷிங்டன் சுந்தர் மாற்று நாளில் தென்ஆப்பிரிக்கா செல்வார் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “