விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முன்னாள் நடுவர் வெங்கடேஷ் பட் காலை 8 மணிக்கு சன்டிவி பாருங்கள் உங்களை ஏமாற்ற மாட்டேன் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், ஏப்ரல் 27-ந் தேதி முதல் 5-வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்க, செஃப் தாமு, மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்து வந்தனர்.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேஷ் பட் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்க்கு பதிலான மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்கியுள்ளார். இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய நடுவரும் அக்கார்டு ஹோட்டல் சி.இ.ஓ.வுமான வெங்கடேஷ் பட் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் வெங்கடேஷ் பட் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவில், ஹலோ எப்படி சொல்வது என தெரியவில்லை. என்னை மிஸ் செய்வதாக நீங்கள் அனுப்பும் மெசேஜ்களை படிக்கும் போது நான் ரொம்ப கொடுத்து வைத்தவனாக உணர்கிறேன். கடவுள் என்னை அதிகமாக ஆசீர்வதித்திருக்கிறார் என தோன்றுகிறது. நன்றி, என்றைக்குமே நான் உங்களை ஏமாற்ற மாட்டேன்.
உங்களை எங்கேயும் விட்டுக் கொடுக்க மாட்டேன். என் வாழ்க்கையின் நாடித் துடிப்பே ரசிகர்களாகிய நீங்கள்தான். இன்று முதல் காலையில் 8 மணிக்கு ஒரு சர்பிரைஸ் காத்துக்கிட்டு இருக்கிறது. சன் டிவி பாருங்கள்! உங்களுக்கு தெரியவரும். உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“