scorecardresearch

சாண்டி மனைவின்னா சும்மாவா? வயிற்றில் குழந்தையுடன் என்னா டான்ஸ்!

Dancing Viral Video : நடன இயக்குநர் சாண்டியின் மனைவி 7 மாத கர்ப்பத்துடன் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாண்டி மனைவின்னா சும்மாவா? வயிற்றில் குழந்தையுடன் என்னா டான்ஸ்!

நடன இயக்குநர் சாண்டியின் மனைவி 7 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில், பாடல ஒன்றுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் நடைபெற்ற மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் நடன இயக்குநர் சாண்டி. அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சிக்கு வந்த அவர், பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில், கிங்ஸ் ஆப் விஜய் என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் கலந்துகொண்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து விஜய் டிவியின் ஹிட் ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற 3-வது சீசனில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களை பெற்ற அவர், சாம்பியன் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மலேசியாவை சேர்ந்த முகேன் என்பவர் சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த நிகழ்ச்சியில் சாண்டி 2-ம் இடம் பிடித்தார். ஆனாலும் அவருக்கு ரசிகர்கள் பட்டாளங்கள் குறையவில்லை. அதற்கு காரணம் பிக்பாஸ் வீட்டில் இவரின் நடத்தை மற்றும், இவரின் கானா பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சாண்டி பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது அவருக்கு இணையாக ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் அவரது மக் லாலா. உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் ரவுண்டில் உள்ளே வந்த அவரது செல்ல மகள் லாலா தனது பேச்சில் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் 2019 பிக்பாஸ் சீசன் இன்று வரை மக்களால் மறக்க முடியாத நிகழ்வாக உள்ள இந்த தருணத்தில், சாண்டியின் மனைவி நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சாண்டியின் மனைவிக்கு சமீபத்தில் வீட்டில் சிம்பிளாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இது தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருந்த்து. தற்போது 7 மாத கர்ப்பமாக இருக்கும் அவர், காதலன்படத்தில் வரும் ‘முக்கால முக்காபுலா’ பாடலுக்கு அசத்தாலக நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுளளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil dance master sandy pregnant wife dancing video