Dindigul I leoni Expalined His Cinema Life : நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற சிவாஜி படத்தில் ரஜினியின் மாமனாராக நடிக்க முடியாதது குறித்து பிரபல பட்டிமன்ற நடுவரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருமான திண்டுக்கல் ஐ லியோனி பேசிய வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குர் என்று பெயரெடுத்த இயக்குநர் ஷங்கர் இயககத்தில் ரஜினி ஸ்ரேயா, விவேக், மணிவன்னன், வடிவுக்கரசி, சாலமன் பாப்பையா, பட்டிமன்றம் ராஜா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த படம் சிவாஜி. கருப்பு பணம் தொடர்பாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் நாயகி ஸ்ரேயாவின் அப்பாவும் ரஜினியின் மாமனாராகவும் நடித்தவர் பட்டிமன்றம் ராஜா. தனது காடி கலந்த நடிப்பால் அவர் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
ஆனால் இந்த கேரக்டரில் நடிக்க முதலில் திண்டுக்கல் ஐ.லியோனியைதான் படக்குழுவினர் அனுகியுள்ளனர். ஆனால் அப்போது அவர் நடிக்க மறுத்ததால், அந்த கேரக்டரில் பட்டிமன்றம் ராஜா நடித்துள்ளார்.
ஆசிரியர் பட்டிமன்ற பேச்சாளர், நடுவர், இலக்கிய சொற்பொழிவாளர், மேடைப்பேச்சாளர் என பன்முக திறமைகொண்டவது திண்டுக்கல் .ஐ.லியோனி.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர் அங்கு புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாறறியுள்ளார். மேலும் கடந்த 2010-ம் அண்டு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கப்பட்டது. தற்போது பட்டிமன்ற நடுவராகவும், திமுகவின் தேர்தல் களத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
கடந்த 1997-ம் ஆண்டு அருண்விஜய் மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியான கங்கா கௌரி என்ற படத்தில் அருண்விஜயின் அப்பாவாக நடித்திருப்பார். அந்த படத்தில் இவ கருமியாக மகன்களிடம் நடந்துகொள்ளும் விதம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பிறகு எந்த படங்களிலும் நடிக்காத அவர், தான் ஏன் அதன்பிறகு சினிமாவில் நடிக்கவில்லை என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக கடந்த சில மாதங்களக்கு முன்பு பேட்டி அளித்திருந்த அவர், நான’ கங்கா கௌரி படத்தில் அருண்விஜய் மற்றும வடிவேலுவுக்கு அப்பாவாக நடித்தேன். அந்த கேரக்டரில் நடிக்கும்போது இயக்குநர் கொஞ்சம்சோகமாக நடிக்க சொன்னார்ஃ ஆனால் நான் எவ்வளவோ முயற்சி செய்தும் சோகம் வரவில்லை. அதன்பிறகு எப்படியோ நடித்து அந்த படம் வெளியானது. அந்த படம் வெளியானபோது நானும் தியேட்டருக்கு சென்றிருந்தேன். அந்த படத்தை பார்த்த எல்லோரும், லியோனிக்கு தேவையில்லாத வேலை வாத்தியாராக இருந்துகொண்டு ஏன் இப்படி நடிக்க வேண்டும் இது தேவையா? அதற்கு பிச்சை எடுத்து இருக்கலாம் என்ற விமர்சித்தனர்.
அன்று முதல் நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டேன். அதன்பிறகு சிவாஜி படத்தில் ரஜினிக்கு மாமனாராக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது எனக்கு பள்ளியில் விடுமுறை கிடைக்கவில்லை. எனக்கு பதிலாக பட்டிமன்றம் ராஜா நடித்திருந்தார். தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு நான் ஆலம்பனா என்ற படத்தில் நடித்துள்ளேன். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசரில் நான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
புகழ் பெற்ற அலாவுதீனும் அற்புத விளக்கும் கதையை தழுவி பல படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் தற்போது ஆலம்பனா திரைப்படம் உருவாகியுள்ளர். பாரி.கே.விஜய் இயக்கியுள்ள இந்த படத்தில் அலாவுதீனாக வைவும், பூதமாக முனிஷ்காந்தும் நடித்துள்னர். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil