தமிழ் சினிமாவின் இயக்குனர்களில் ஒருவரான அமீர் புதிதாக தொடங்கியுள்ள வித்தியாசமான காபி ஷாப் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பாலா இயக்கத்தில் வெளியான சேது படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய அமீர் சூர்யா த்ரிஷா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். காதலை வித்தியாசமாக சொன்ன மௌனம் பேசியதே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், முதல் படத்திலேயே அமீர் கவனிக்கப்படும் இயக்குனராக மாறினார்.
தொடர்ந்து 2-வது படமாக அமீர் இயக்கிய ராம் முதல் படத்தை விட வித்தியாசனமாக இருந்தது. அறிமுக நடிகராக ஜீவா சரண்யா இருவரும் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த சைகாலஜிக்கல் த்ரில்லர் படம் அமீரின் இயக்கத்தில் மற்றொரு பரிமானத்தை காட்டியது. அதன்பிறகு அறிமுக நடிகர் கார்த்தியை வைத்து கிராமத்து காதல் ஆக்ஷன் படமாக வெளியான வெளியான பருத்தி வீரன் படம் இந்திய அளவில் இன்றளவும் பேசப்படும் ஒரு படமாக உள்ளது.
இந்த படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்ட நிலையில், அமீர் அடுத்து ஜெயம்ரவி நடிப்பில் இயக்கிய ஆதிபகவன் படம் வரவேற்பை பெற்றவில்லை. அதன்பிறகு படங்கள் இயக்காத அமீர் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். அதன்படி யோகி படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான அமீர் தொடர்ந்து வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
தற்போது இறைவன் மிக பெரியவன், என்ற படத்தை இயக்கிய வரும் அமீர் நிலமெல்லாம் ரத்தம் என்ற வெப் தொடரரையும் இயக்கி வருகிறார். கடந்த சில வருடங்களாக அமீர் படம் இயக்கவில்லை என்றாலும் அவரது இயக்கத்திற்காக ரசிகர்கள் கூட்டம் இன்னும் அப்படியே தான் உள்ளது. இந்நிலையில், இயக்குனர் அமீர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி சுங்கசாவடி மற்றும் மாயாஜால் சினிமாஸ் அருகே புதிய ரெஸ்டாரன்ட் ஒன்றை துவங்கியுள்ளார்.
Director #Vetrimaaran and Actor @sooriofficial inaugurated Director #Ameer 's new restaurant #4am Cafe & Kitchen at ECR near Uthandi toll plaza and Mayajaal
A perfect spot for all Coffee enthusiasts to chill with friends & family.@directorameer #JafferSadiq #RameshKrishnan… pic.twitter.com/GkyzSQiQRQ— Nikil Murukan (@onlynikil) June 3, 2023
4ஏஎம் காஃபி அன்ட் கிச்சன் ( ‘4am coffee & Kitchen’) என்று பெயரிட்டுள்ள இந்த காஃபி ஷாப்பை இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூரி இருவரும் திறந்து வைத்துள்னர். இந்த ஷாப் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 12 வரையும் இயங்கவுள்ளது. மேலும் இந்த ஷாப்பிற்கு வரும் வாடிக்கையாளர் படிப்பதற்கு நல்ல கருத்துகள் உள்ள புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளது.
இந்த காஃபி ஷாப் திறப்பு விழாவில் வெற்றிமாறன் அவருடைய குடும்பத்தாருடன் வருகை தந்திருந்தார். அவரை தொடர்ந்து இயக்குனர் கரு.பழனியப்பன். நடிகை கன்னிகா சினேகன் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர். இயக்குனர் அமீரின் இந்த முயற்சிக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.