எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்த இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து இன்று திடீர் மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், எதிர்நீச்சல் சீரியல் குழுவினர் அவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்,
இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஜி மாரிமுத்து. 1994-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஆசை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரிமுத்து 2008-ம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு வெளியான புலிவால் படத்தையும் இயக்கி இருந்தார். நடிகதராகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்ட மாரிமுத்து, எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக கலங்கி வந்தார். இதனிடையே இன்று காலை டப்பிங் பணியில் இருந்த நடிகர் மாரிமுத்து திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் அவருடன் நடித்து வந்த நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் 3-வது மருமகள் கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஹரிப்பிரியா 'எங்க ஆதி குணசேகரன் மாமா?'.. . என்று கண்ணீருடன் கதறி அழுத நிகழ்வு பலரையும் கலங்க வைத்துள்ளது.
தொடர்ந்து நடிகர் சூரி, பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நடிகர் கதிர் உள்ளிட்ட பலரும் மாரிமுத்துவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“