/indian-express-tamil/media/media_files/2025/08/19/salman-sikkandar-2025-08-19-21-20-45.jpg)
பாலிவுட்டில் கஜினி, அகிரா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் கடைசியாக சல்மான் நடிப்பில் இயக்கிய சிக்கந்தர் திரைப்படம் படுதோல்வியையும் எதிர்மறையான விமர்சனங்களையும் சந்தித்தது. இந்த தோல்விக்கு என்ன காரணம் என்பது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், 9 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட்டில் இயக்கிய படம் சிக்கந்தர். சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சத்யராஜ், ஷர்மன் ஜோஷி, மற்றும் பிரதீக் பப்பார் போன்ற நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், உலகளவில் வெறும் ரூ.184.6 கோடியை மட்டுமே வசூலித்தது. ஏ.ஆர்.முருகதாஸின் இந்த முயற்சி அவருக்கு மீண்டும் ஒரு பின்னடைவைத்தான் கொடுத்தது.
படத்தின் தோல்வி குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் பல உண்மைகளை வெளிப்படையாகப் பேசினார். இதில், "ஒரு பெரிய நட்சத்திரத்துடன் ஷூட்டிங் செய்வது அவ்வளவு எளிதல்ல. அவர் இரவு 8 மணிக்குத்தான் செட்டிற்கு வருவார். அதனால் பகல் காட்சிகளைக்கூட நாங்கள் இரவு நேரத்தில்தான் படமாக்க வேண்டியிருந்தது. தமிழ் திரையுலகில் அதிகாலையிலேயே படப்பிடிப்புகளைத் தொடங்கும் பழக்கம் இருக்கிறது.
பாலிவுட்டில் நட்சத்திரங்களின் நேரத்திற்கு ஏற்ப ஷூட்டிங் அட்டவணை மாறும். இந்த நிலைமை மற்ற நடிகர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியது. "ஒரு காட்சியில் 4 குழந்தைகள் இருந்தால், பள்ளி முடிந்து வரும் காட்சியைக்கூட நள்ளிரவு 2 மணிக்குத்தான் படமாக்க வேண்டி வந்தது. அந்த நேரத்தில் குழந்தைகள் சோர்வடைந்து தூங்கிவிடுவார்கள். படத்தின் தோல்விக்கு நான்தான் முழு பொறுப்பு. நான் நினைத்த கதையை சரியாகத் திரையில் கொண்டு வரத் தவறிவிட்டேன்," என்று ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக்கொண்டார்.
.@ARMurugadoss mocked @BeingSalmanKhan for coming late to the shoot since he was only available at night, we had to shoot entirely with green screen and vfx, he claims because of this he wasn’t able to showcase his true vision.
— U F (@UF_Offl) August 18, 2025
focus on your script rather than only complaining. pic.twitter.com/iY7NzNJmFC
அதே சமயம், சல்மான் காணுக்கு இருந்த கொலை மிரட்டல்கள், அதிகமான காட்சிகள் கிரீன் மேட்டில் படமாக்கப்பட்டது, அவரை வைத்து பொது இடங்களில் ஷூட்டிங் பண்ண முடியாது என்பதால் இவ்வாறு பணிகளை மேற்கொண்டோம். சல்மானும் தாமதமாகத்தான் ஷூட்டிங்கிற்கு வருவார் என்று முருகதாஸ் கூறியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இதற்கு முன்பு இயக்கிய அகிரா திரைப்படமும் பாலிவுட்டில் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.