அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள நிலையில், தற்போது சென்னை திரும்பியுள்ள இயக்குனர் அட்லி தனது மனைவி பிரியாவுடன் படம் பார்த்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழில், ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என 4 பெரிய வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி அடுத்து பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிப்பில் இயக்கியுளள் படம் ஜவான். நயன்தாரா, விஜய் சேதுபதி, உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு ரூபன் எடிட் செய்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இவர்கள் இருவருமே இந்த படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகியுள்ளனர்.
இதனிடையே பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பதான் படத்திற்கு பிறகு அட்லி ஷாருக்கானுக்கு ஜவான் என்ற வெற்றிப்படத்தை கொடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். நாடு முழுவதும் ஜவான் படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக வடமாநிலங்கள் ஜவான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனது.
இதனிடையே தனது தமிழ் ரசிகர்களுடன் படம் பார்க்க சென்னை திரும்பியுள்ள இயக்குனர் அட்லி தனது மனைவி பிரியாவுடன் ஜவான் படத்தை சென்னையில் பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை படத்தைப் பகிர்ந்து கொண்ட பிரியா, “ஜவானின் முதல் காட்சிக்கு செல்லும் வழியில்” என்று பதிவிட்டுள்ளார். தமிழகம் தவிர வட மாநிலம் மற்றும் பிற மாநிலங்களில் ஜவான் திரைப்படம் அதிகாலை 4 மணிக்கே திரையிடப்பட்டது.
https://www.instagram.com/p/Cw3_33DhthL/?utm_source=ig_embed&ig_rid=35e637f6-20bf-4ce2-8508-d179e1574dd1
தமிழக அரசு சமீபத்தில் மாநிலத்தில் அதிகாலை காட்சிகளைத் தடை செய்யும் விதி இருப்பதால், சென்னையில் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது. இந்த காட்சியை அட்லியும், பிரியாவும் படத்தைப் பார்த்து ரசித்தனர். இந்த படத்தில் பிரியா நடிக்கவில்லை என்றாலும், அவர் முழு குழுவினருக்கும் ஒரு பெரிய ஆதரவாக இருந்தார் மற்றும் அவர்கள் அனைவருக்கும் உதவினார். இப்படத்திற்கு ப்ரியாவின் பங்களிப்புக்கு பாடலாசிரியர் விவிகே நன்றி தெரிவித்தார்.
இதற்கிடையில், ஒரு பெரிய கமர்ஷியல் படத்தை கொடுத்த அட்லிக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கடைசியாக வெளியான ஷாருக்கான் படம் இந்தியில் பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில், அந்த படத்தின் முதல் நாள் வசூலான 27 கோடி வசூல் சாதனையை ஜவான் படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷின், ஜவான் ஏற்கனவே மதியம் வரை 19 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது. இன்று மாலைக்குள் அதிக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார்.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“