scorecardresearch

படம்தான் காப்பி… மகனின் பெயருமா? அட்லியை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

அட்லி தனது மகனின் பெயரையும் காப்பியடித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

Atlee Kumar
இயக்குனர் அட்லி குமார்

ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வரும் இயக்குனர் அட்லி சமீபத்தில் தனது குழந்தைக்கு வைத்த பெயரையும் காப்பி அடித்துவிட்டார் என்று நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஆர்யா நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இவர், தற்போது பாலிவுட்டில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். நயன்தாரா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் அட்லிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு மீர் என்ற பெயரிட்டுள்ளதாக அட்லி சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த பெயர் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில், அட்லி இந்த பெயரையும் காப்பியடித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

அட்லி தனது குழந்தைக்கு மீர் என்று பெயர் வைத்துள்ளார். அதே சமயம் அவர் தற்போது இயக்கி வரும் ஜவான் படத்தின் நாயகன் ஷாருக்கானின் தந்தை பெயரும் மீர் தான்.அந்த பெயரை காப்பி அடித்துதான் அட்லி தனது குழந்தைக்கு பெயர் வைத்துள்ளார் என்று நெட்சன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே அட்லி இயக்கிய ராஜா ராணி படம் மணிரத்னத்தின் மௌனராகம், தெறி, விஜயகாந்தின் சத்ரியன், மெர்சல், கமலின் அபூர்வ சகோதரர்கள், பிகில், ஷாருக்கானின் ஜக்தே இந்தியா என காப்பி அடித்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது தனது குழந்தைக்கே காப்பியடித்து பெயர் வைத்துள்ளதாக கூறி வருகின்றனர்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil director atlee netizens troll for his son name meer

Best of Express