Advertisment

டாக்டர் ராமதாஸாக சரத்குமார்... லைகா தயாரிப்பு... சேரன் இயக்கம்?

கடைசியாக தமிழ்க்குடிமகன் என்ற படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்ற சேரன், சமீபத்தில் ஜர்னி என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார்.

author-image
WebDesk
New Update
Cheran Director

சரத்குமார் - சேரன்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக உள்ளதாக கூறப்படும் நிலையில், இயக்குனர் சேரன் இந்த படத்தை இயக்க, சரத்குமார் ராமதாஸ் கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

1997-ல் வெளியான பாரதி கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சேரன். தொடர்ந்து வெற்றிக்கொடி கட்டு, தேசிய கீதம், பொற்காலம், பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த சேரன், ஆட்டோகிராஃப், மாயக்கண்ணாடி, பொக்கிஷம், யுத்தம் செய் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

2009-ம் ஆண்டு பொக்கிஷம் படத்திற்கு பின் படங்கள் இயக்காத சேரன், சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு, ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை, திருமணம் உள்ளிட்ட படங்களை இயக்கி கடைசியாக தமிழ்க்குடிமகன் என்ற படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்ற சேரன், தற்போது ஜர்னி என்ற வெப் தொடரை இயக்கியிருந்தார். சோனி லிவ்வில் வெளியான இந்த தொடர் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, அடுத்து கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு புதிய படத்தை சேரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை முடித்துவிட்டு, அடுத்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்தில் டாக்டர் ராமதாஸ் வேடத்தில் நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் தற்போது முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம், பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ள நிலையில்,  பா.ம.க மூத்த தலைவர்களில் ஒருவரான ஜி.கே மணியின் மகன் தமிழ் குமரன், லைகா நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், வரும் பிப்ரவரி 9-ந் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.

தற்போது ரஜினி நடித்து வரும் வேட்டையன், கமல்ஹாசனின் இந்தியன் 2, மோகன்லால் நடிப்பில் லூசிஃபர் 2, அஜித் நடிப்பில் விடா முயற்சி உள்ளிட்ட படங்களையும் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment