/indian-express-tamil/media/media_files/Pd7HhQRkqluYkMlbhBd8.jpg)
ரஜினிகாந்தின் கூலி படத்தில் நடித்து வரும் நடிகர் நாகர்ஜூனா நடித்த காட்சிகள் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனராக மாறிய லோகேஷ் கனகராஜ், லியோ படத்திற்கு பிறகு, தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகர்ஜூனா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் நாகர்ஜூனா நடித்த சில காட்சிகள், இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், படக்குழுவினர் இந்த நிகழ்வுகளால் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியி்ட்டுள்ள பதிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Two months of hard work by many people have gone in vain because of one recording.
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 18, 2024
I humbly request everyone not to engage in such practices, as they spoil the overall experience. Thank you.
Then Master , Leo
— Arun Vijay (@AVinthehousee) September 18, 2024
Now Coolie
💔💔💔💔!
2 மாதங்களாக பலபேர் உழைப்பில் உருவானது இப்போது ஏதோ ஒரு ரெக்கார்டிங் மூலம் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. இது போன்ற செயல்களில் ஈடுபட்டு ஒரு படைப்பின் உணர்வை கெடுக்காதீர்கள் என்பதே எனது வேண்டுகோள். நன்றி என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், பலரும் லோகேஷ் கனகராஜ்க்கு ஆறுதல் கூறி வருகின்றனர். இதில் நடிகர் அருண் விஜய், மாஸ்டர் லியோ படத்திற்கு பிறகு இப்போது கூலி என்று பதிவிட்டு இதயம் உடைந்த எமோஜியை பதிவிட்டுள்ளார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.