பாகுபலி நாயகனுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன்
ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தொடர்ந்து விஜயுடன் மாஸ்டர், தனுஷூடன் மாறன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது விக்ரமுடன் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே மாளவிகா மோகனன் அடுத்து பிரபாஸ்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இயக்குனர் மாருதி இயக்கும் புதிய படத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன்ன நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சிம்பு நடிக்க இருந்த கதையில் பிரதீப் ரங்கநாதன்
லவ்டூடே படத்தின் மூலம் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக உயர்ந்துள்ள பிரதீப் ரங்கநாதன் அடுத்து என்ன படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனிடையே கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாக கூறபப்டுகிறது. இந்த கதை சிம்புவிடம் சொல்லி அவரும் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பிரதீப் ரங்கநாதன் பெயர் அடிப்படுகிறது.
விஜய் சேதுபதியுடன் இரண்டு பெண்கள்?
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது மைக்கேல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் விஜய் சேதுபதி கதை கேட்கும்போது இரண்டு பெண்களை தனக்கு பக்கத்தில் வைரத்தக்கொண்டு கதை கேட்பதாகவும், இந்த இரு பெண்களும் விஜய் சேதுபதிக்கு நடிப்பு பயிற்சி சொல்லிக்கொடுக்கும் பயிற்சியாளர்கள் என்று கூறப்படுகிறது.
பதான் 5 நாட்கள் வசூல் நிலவரம்
வாரிசு துணிவு படங்களுக்கு போட்டியாக கடந்த ஜனவரி 25-ந் தேதி வெளியான படம் பதான். ஷாருக்கான் 4 வருட இடைவெளிக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுத்துள்ள இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், படம் வெளியாகி 5 நாட்களில், உலகம் முழுவதும் சுமார் 560 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இலங்கையில் வரலட்சுமி சரத்குமார்
போடா போடி படத்தின் மூலம் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், அடுத்து தாரை தப்பட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கு மலையாள மொழிகளில் பிரபலமான வில்லியாக வலம் வரும் வரலட்சுமி, கடந்த சில தினங்களாக இலங்கையில் முகாமிட்டுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைகப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil