/tamil-ie/media/media_files/uploads/2022/07/SAC.jpg)
பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனக்கு 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் கோயிலில் ஆயுஸ் ஹோமம் வளர்த்து சிறப்பு வழிபாடு செய்து, நடிகர் விஜய் பெயரில் அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் மேற்கொண்டார்
/tamil-ie/media/media_files/uploads/2022/07/IMG_20220704_140126.jpg)
திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸவரர் கோயிலில் ஆயுஷ் ஹோமம் வளர்த்து கால சம்ஹார மூர்த்தியை வழிபட்டால் ஆயுள் விருத்தியாகும் என்பது ஐதீகம். இதனால் 60 வயது, 70 வயது மற்றும் 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து மணிவிழா, சதாபிஷேக விழா மேற்கொள்வது வழக்கம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/IMG_20220704_140216.jpg)
அந்த வகையில், நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனக்கு 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு தனது மனைவி ஷோபாவுடன் அமிர்தகடேஷ்வரர் கோவிலுக்கு வந்து ஆயுள் விருத்தி ஹோமம் செய்து காலசம்ஹார மூர்த்தி, அம்பாள் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். மேலும், தனது மகன் விஜய் பெயரில் அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.