Advertisment
Presenting Partner
Desktop GIF

கமல்ஹாசன் சீக்ரெட் உடைத்த பழைய நண்பர்: மேக்கப் ரூமில் அந்த நடிகை; அதிர்ச்சியில் வாணி கணபதி- சாருஹாசன்

மஞ்ஜூமல் பாய்ஸ் படத்தின் வெற்றி குணா படம் குறித்து இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள வழி செய்துள்ளது

author-image
WebDesk
New Update
Santhana Bharathi Kamal Haasan

கமல்ஹாசன் - சந்தான பாரதி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கொடைக்கானலில் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு வெளியாகியுள்ள மலையாள படமான மஞ்ஜூமல் பாய்ஸ் திரைப்படம் கேரளாவை தாண்டி தமிழக ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில, கமல்ஹாசன் குறித்து அதிர்ச்சி தகவலை குணா படத்தின் இயக்குனர் சந்தான பாரதி கூறியுள்ளார்

Advertisment

தமிழ் சினிமாவில் பல புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய பெருமைக்கு சொந்தக்காரர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், நடன இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர். தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் முக்கிய நட்சத்திரமாக இருந்துவரும் அதே வேளையில், அவர் தொடர்பான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை.

திருமணத்தை பொருத்தவரை முதலில் வாணி கணபதி என்பவரை திருமணம் செய்துகொண்ட கமல்ஹாசன், ஒரு கட்டத்தில் அவரை பிரிந்து நடிகை சரிகாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஸ்ருதிஹாசன் அக்ஸரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர். ஒரு கட்டத்தில் சரிகாவையும் பிரிந்த கமல்ஹாசன், நடிகை கெளதமியுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். தற்போது அவரையும் பிரிந்துவிட்டார்

தற்போது மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப், ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார். கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து இந்தியன் 2 என்ற பிரம்மாண்ட படம் வெளியாக உள்ளது. இதனிடையே மஞ்ஜூமல் பாய்ஸ் படத்தின் வெற்றி குணா படம் குறித்து இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள வழி செய்துள்ளது

இதன் காரணமாக பலரும் குணா படத்தின் இயக்குனர் சந்தான பாரதியை நேர்காணல் செய்து வருகின்றனர். அந்த வகையில், ஒரு நேர்காணலில் பங்கேற்ற சந்தான பாரதி, கமல்ஹாசன் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார். கமல்ஹாசன் வாணி கணபதியை திருமணம் செய்த பிறகு, சரிகாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை பற்றி தெரிந்துகொண்ட வாணி கணபதி, சந்தான பாரதியிடம், உங்கள் நண்பர் செய்வது சரியில்லை என்று அவரிடம் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

இது பற்றி தெரிந்துகொண்ட கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் சந்தான பாரதி இருவரும் கமல்ஹாசன் ஷூட்டிங்கில் இருந்தபோது, அவரை சந்தித்து பேசி போன போது, கமல்ஹாசன் அவர்கள் இருவரையும் மேக்கப் அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு சரிகா இருப்பதை பார்த்த இருவருமே அதிர்ச்சியடைந்துள்ளனர். சரிகாவை பற்றி பேசலாம் என்று வந்தால் அவரே இங்கு இருக்கிறாரே என்று நினைத்து அப்படியே பேசாமல் வந்துள்ளனர்.

அதன்பிறகு விஷயம் பெரிதாக, வாணி கணபதி கமல்ஹாசனை பிரிந்து சென்றுவிட்டார். அடுத்து சரிகாவை அழைத்து வந்த கமல்ஹாசன் சிவாஜி கணேசன் தலைமையில் அவரை திருமணம் செய்துகொண்டார் என்று ஆதன் சினிமா யூடியூப் சேனலுக்கு கடந்த வருடம் அளித்த பேட்டியில் சந்தான பாரதி கூறியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamal Haasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment