Advertisment

சுப்ரமணியபுரம் படத்தில் ரஜினி - கமல் : 15 ஆண்டுகளுக்கு பின் சசிகுமார் ஓபன் டாக்

சமீபத்தில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த சுப்ரமணியபுரம் படம் குறித்து இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் சசிகுமார் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்

author-image
WebDesk
New Update
Supramaniyapuram

நடிகரும் இயக்குனருமான எம்.சசிகுமார் தனது சக நடிகர் ஜெய்யுடன் சுப்ரமணியபுரம் படப்பிடிப்பு தளத்தில்

சினிமாவில் முன்னணி நடிகர்களின் பல படங்கள் மக்கள் மனதில் நீங்க இடம் பிடிப்பது வழக்கமான ஒன்று. எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி கமல் காலத்தில் இந்த வழக்கம் சாத்தியமானதாக இருந்தாலும் இன்றைய டிஜிட்டல் காலக்கட்டத்தில் ஒரு படம் வெளியாகி பல வருடங்கள் கழித்தும் அந்த படம் வெளியான நாளை கொண்டாடுவது அரிதான ஒரு விஷயமாகத்தான் உள்ளது.

Advertisment

அந்த வகையில் அரிதிலும் அரிதாக தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாசிக் படமாக ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ள படம் சுப்ரமணியபுரம். ஒரு அறிமுக இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் எம்.சசிகுமார் இந்த படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமாகி இருந்தார். முதல் படம் அவருக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவின் ரசிகர்களுக்கும் மறக்க முடியாத ஒரு படமாக மாறியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இயக்குனர் பாலா மற்றும் அமீரிடம் உதவி இயக்குனராக இருந்த சசிகுமார் 2008-ம் ஆண்டு சுப்பிரமணியபுரம் என்ற படத்தை இயக்கி தயாரித்து நாயகனாகவும் நடித்திருந்தார். ஜெய், சுவாமி, கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் இதனை கொண்டாடி வருகின்றனர்.

இது குறித்து பேசியுள்ள இயக்குனர் சசிகுமார் “நான் முதலில் ஒரு திரைப்படத்தை உருவாக்க ஆசைப்பட்டபோது, நான் உதவி இயக்குனராக பணியாற்றிய எனது வழிகாட்டிகளான இயக்குநர்கள் பாலா மற்றும் அமீர் ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதே எனது முதன்மையான குறிக்கோளாக இருந்தது. அவர்களின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதே எனது நோக்கமாக இருந்தது. மேலும், நான் வழக்கமான விதிமுறைகளிலிருந்து விலகிச் செல்வதை நோக்கமாகக் வைத்திருந்தேன்.

பொதுவாக, படங்களில், ரவுடி கதாபாத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட உடலமைப்புடன் வெள்ளை சட்டை மற்றும் வேட்டிகளை அணிவார்கள், ஆனால் நான் அந்த ஸ்டீரியோடைப் தவிர்க்க விரும்பினேன். கதைக்களத்தில் நட்பு மற்றும் பழிவாங்கும் கூறுகள், வணிக மற்றும் சினிமா அம்சங்களை உள்ளடக்கியிருந்தாலும், திரைப்படம் முழுவதும் யதார்த்த உணர்வைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தேன். இந்த பார்வையை மனதில் கொண்டு சுப்பிரமணியபுரம் உயிரூட்டப்பட்டது என்று கூறியுள்ளார்.

பரமன் (சசிகுமார் நடித்தார்) மற்றும் அழகர் (ஜெய்) கதாபாத்திரங்களை ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் எவ்வாறு சித்தரித்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்து முழு கதைக்களமும் என் மனதில் உருவானது. நான் ஸ்கிரிப்டை எழுதி முடித்தவுடன், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மனோபாவத்தையும் நான் வரையறுக்க வேண்டியிருந்தது. அந்தச் செயல்பாட்டின் போது, கமல் சாரின் அம்சங்களைக் கொண்டு, குறிப்பாக கதையில் காதல் கோணத்தைக் கருத்தில் கொண்டு, ஜெய்யின் உடைகள் எப்பொழுதும் துடிப்பாகவும், வண்ணமயமாகவும் இருக்கும் என்பதால், அழகரைக் உருவாக்கினேன்.

மறுபுறம், அந்த நேரத்தில் ரஜினிகாந்தின் தோற்றத்திற்கு நிகரான ஸ்டெப்-கட் சிகை அலங்காரம் மற்றும் செக் செய்யப்பட்ட சட்டைகளுடன் எனது கதாபாத்திரமான பரமன் ஸ்டைலை அமைத்தேன். ரஜினி கமல் கேரக்டர்களை சித்தரிப்பதை நான் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக, இந்த நடிகர்கள் இந்த குறிப்பிட்ட கேரக்டர்களில் நடித்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து இந்த அம்சங்களைக் கதாபாத்திரங்களுக்கு ஒதுக்கினேன், ”என்று சசிகுமார் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.

திரைக்கதையை வடிவமைக்கும் போது, நட்பு அம்சத்தில் தான் முதன்மையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய சசிகுமார், தான் எழுதிய முதல் காட்சி க்ளைமாக்ஸ் என்றும் பின்னர், முழு கதையையும் கட்டமைக்க அவர் மீண்டும் ஸ்கிரிப்ட் எழுதியதாகவும் கூறியுள்ளார். “காதல் மற்றும் நட்பில் துரோகம் செய்வதைப் பற்றி படம் எடுக்க விரும்பினேன். சுப்ரமணியபுரத்தின் திரைக்கதையை 10 நாட்களில் முடித்துவிட்டேன். நான் எழுத உட்கார்ந்தபோது, முழு கதையும் ஒரு சங்கிலி போல் எனக்கு வந்தது. முதல் வரைவு தயாரான பிறகு, நான் அதை மெருகூட்டி மீண்டும் எழுதினேன் என்று கூறியுள்ளார்.

இறுக்கமான நிலையான ஸ்கிரிப்ட்களைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த சசிகுமார், இடம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு பல கூறுகளை படத்தில் இணைத்ததாகவும், "முழுப் படமும் படக்குழுவினரின் கடுமையாக உழைப்பு என்றும் தனது ஒரிஜினல் ஸ்கிரிப்டில், “கண்கள் இரண்டால்” பாடலுக்கு இடமில்லை என்றும், படத்தில் இடம்பெற்ற ஒரே இசை இளையராஜா பாடல்கள் பின்னணியில் இசைக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Sasikumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment