Advertisment

கேப்டன் சொன்னதை மீறி எஸ்.ஏ.சி மோசடி: விஜயகாந்த் மாஜி மேனேஜர் ஷாக் புகார்

இயக்குனரும் நடிகர் விஜயின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னிடம் 15 லட்சம் பணம் மோசடி செய்துவிட்டதாக விஜயகாந்த் மேனேஜர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
SAC

நடிகர் விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னிடம் 15 லட்சம் பணம் ஏமாற்றிவிட்டதாக நடிகர் விஜயகாந்தின் முன்னாள் உதவியாளரும் தயாரிப்பாளருமான சுப்பையா கூறியுள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். பல உதவி இயக்குனர்களுக்கு படங்கள் கொடுத்து வாய்ப்பு அளித்த விஜயகாந்த் தன்னுடன் இருந்த உதவியாளர்களையும் தயாரிப்பாளர்களாக மாற்றியுள்ளார். அந்த வகையில் விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்து வெற்றி பெற்ற பெரியண்ணா படத்தின் மூலம் தயாரிப்பாளராக ஆனவர் சுப்பையா.

விஜயகாந்திடம் பல வருடங்களாக உதவியாளராக பணியாற்றி வந்த சுப்பையா, இயக்குனரும் நடிகர் விஜயின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னிடம் 15 லட்சம் பணம் மோசடி செய்துவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர்,

செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுப்பையா ‘1981 முதல் விஜயகாந்தின் உதவியாளராக 75 படங்களில் வேலை செய்துள்ளேன். அதில் எஸ்.ஏ.சந்திரசேகரின் சில படங்களும் அடக்கம். அப்போதுதான் சந்திரசேகருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அதன்பின் ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த படங்களுக்கு விஜயகாந்த் என்னை மேனேஜராக நியமித்தார். கேப்டன் பிரபாகரன் முதல் உளவுத்துறை வரை பல படங்களில் வேலை செய்தேன்.

ஒருகட்டத்தில் நான் தயாரிப்பாளராக ஆசைப்பட்டு விஜயகாந்தை கெஸ்ட் ரோலில் நடிக்கை வைத்து ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். இதற்கு விஜயகாந்த் சம்மதம் அளித்தார். அதன்பிறகு எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பேசினேன். அப்போது அவர் விஜயை வைத்து படங்கள் தயாரித்து நஷ்டத்தில் இருந்தார். மேலும், செந்தூரபாண்டி படத்தில் நடிக்க விஜயகாந்திடம் டேட் வாங்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.

அப்போது நான்தான் அவரை விஜயகாந்திடம் அழைத்து சென்றேன். செந்தூரபாண்டி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க விஜயகாந்த் கொஞ்சம் யோசித்தார். அப்போது எஸ்.ஏ.சி கேட்டால் நீங்கள் கெஸ்ட்ரோலில் நடிக்கலாம் என சொன்னேன். அதன்பின் விஜயகாந்தும் சம்மதம் சொன்னார். அதன்பின் நான் தயாரிக்க, எஸ்.ஏ.சி இயக்கத்தில் நடிகர் சூர்யா ஹீரோ, விஜயகாந்த் கெஸ்ட் ரோல் என பெரியண்ணா படம் தயாரிக்க முடிவானது. அதற்கு முன் 7 லட்சம் சம்பளம் வாங்கிய எஸ்.ஏ.சி. என் படத்திற்கு 20 லட்சம் சம்பளம் கேட்டார். சரி. எல்லாவற்றுக்கும் உதவி செய்வார் என நினைத்து ஒப்புக்கொண்டேன்.

அதன்பின் பூஜை போட்டவுடன் எல்லா ஏரியாவும் படம் விற்றுவிட்டது. உடனே படத்தின் லாபத்தில் எனக்கு மேலும் 20 லட்சம் வேண்டும் என்று கேட்டார். அதற்கும் நான் ஓகே என்று சொல்லி, படப்பிடிப்பு தொடங்கியது. அந்த நேரத்தில் அவரின் மனைவி ஷோபாவை விட்டு ‘அவருக்கு உடல் நலம் சரியில்லை. எனவே, அவரின் உதவியாளர்களை வைத்து எடுத்து கொள்ளுங்கள். அவர் ஐடியா மட்டும் கொடுப்பார்’ என சொல்ல வைத்தார். அதற்கும் ஒத்துக்கொண்டேன்.

படம் முடிந்து வெளியாகி பெரிய ஹிட் ஆனது. சென்னையில் சில ஏரியாக்களை அவரே விற்றார். எனக்கு 20 லட்சம் மதிப்பில் ஒரு வீடும், என் குழந்தைகளின் பெயரில் ரூ.15 லட்சமும் டெப்பாசிட் செய்து விடுங்கள் என எஸ்.ஏ.சிசியிடம் விஜயகாந்த் சொன்னார். ஆனல், எஸ்.ஏ.சி.யோ அவரின் மனைவியும், விஜயின் அம்மாவுமான ஷோபாவின் பெரியப்பா மகன் நடத்தும் ஏ.பி.சி. பிரைவேட் லிமிட்டேட் எனும் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் டெப்பாசிட் செய்கிறேன் என்று சொன்னார்.

நான் அதை ஏற்கவில்லை. அதற்கு நானும் அதில் டெப்பாசிட் செய்துள்ளேன். மாதா மாதம் வட்டி தருகிறார்கள். உன் பணத்திற்கு நான் பொறுப்பு என்று சொன்னார்.. எனவே, சம்மதம் சொன்னேன். முதல் மாதம் மட்டும் 30 ஆயிரம் வட்டி கொடுத்தார்கள். அதன்பின் 15 ஆயிரம் கொடுத்தார்கள். அப்போது எனக்கு புரிந்துவிட்டது. என் பணத்தை திருப்பி கேட்டேன். சரி அந்த பணத்தை நானே கொடுக்கிறேன் என்றார்.

ஆனால், பல வருடங்களாக அலைந்தும் அவரிடம் பணம் வாங்க முடியவில்லை. இப்போது என்னை சந்திக்கவே மறுக்கிறார். அவரின் வீட்டுக்கு சென்றால் கூட என்ன உள்ளே அனுமதிக்கவில்லை. அவரை நம்பி என் மகளின் திருமணத்தை நடத்தினேன். கடந்த 25ம் தேதி திருமணம் முடிந்துவிட்டது. கடன் வாங்கித்தான் என் மகள் திருமணத்தை நடத்தினேன். இப்போதும் அவர் பணத்தை கொடுக்கவில்லை. காவல் நிலையத்தில் புகாரளிக்க நான் விரும்பவில்லை. அவர் மனசாட்சி படி நடந்து கொண்டால் போதும். ஆனால், அவர் பணத்தை திருப்பி கொடுப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை.

வட்டி போட்டு கொடுத்தால் எனக்கு 47 லட்சம் கொடுக்க வேண்டும். நான் அதை கூட கேட்கவில்லை. விஜயகாந்த் இப்போது நன்றாக இருந்திருந்தால் அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ’ எனக்கூறி கதறி அழுதார். சினியுலகம் என்ற யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், விஜயகாந்தின் தயாரிப்பளர் சுப்பையா விஜயின் அப்பாவும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது கூறியுள்ள இந்த புகார் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment