Advertisment
Presenting Partner
Desktop GIF

ஆண்களை நீக்கினால் சிறந்த டைரக்டர் … பெண்களை நீக்கினால் பாலியல் பழியா? சீனு ராமசாமி

பிரபல சினிமா விமர்சகர் வலைப்பேச்சு பிஸ்மி கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Seenu ramasamy

சீனு ராமசாமி - மனிஷா யாதவ் - வலைப்பேச்சு பிஸ்மி

இடம் பொருள் ஏவல் படத்தின் படப்பிடிப்பின்போது நடிகை மனிஷா யாதவ்-க்கு இயக்குனர் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்தாக பிரபல விமர்சகர் பிஸ்மி கூறி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள இயக்குனர் சீனுராமசாமி, ஆண்களை நீக்கினால் சிறந்த இயக்குனர் பெண்களை நீக்கினால் பாலியல் பழியா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

கூடல்நகர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சீனுராமசாமி தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் உள்ளிட்ட சில வெற்றிப்படங்களை இயக்கியிருந்தார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் உருவான படம் இடம் பொருள் ஏவல். விஷ்ணு விஷால், விஜய் சேதுபதி நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் இதுவரை வெளியாகமல் உள்ளது.

இதனிடையே சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா கூறிய பாலியல் குற்றச்சாட்டு, நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் கூறிய அவதூறு கருத்து உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த வலைப்பேச்சு பிஸ்மி என்ற சினிமா விமர்சகர், இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்த நடிகை மனிஷா யாதவ்க்கு சீனுராமசாமி பாலியல் தொல்லை கொடுத்தார். அவரது தொல்லை தாங்காமல் அவர் படத்தில் இருந்தே விலகிவிட்டார் என்று கூறியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த சீனுராமசாமி ஒரு குப்பை கதை படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், மனிஷா யாதவ் தனக்கு நன்றி கூறியதை சுட்டிக்காட்டி நான் அவருக்கு தொல்லை கொடுத்திருந்தால் அவர் எதற்காக எனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கேட்டிருந்தார். மேலும் தனது அடுத்த படத்தில் மனிஷா யாதவ் நடிப்பார் என்றும் இயக்குனர் சீனு ராமசாமி கூறியிருந்தார். அவரின் இந்த பதிவு சமூகவலைளங்களில் வைரலாக பரவியது.

இதற்கு பதில் அளித்த நடிகை மனிஷா யாதவ், மேடை நாகரிகம் காரணமாக அவருக்கு நன்றி தெரிவித்தேன். மற்றபடி 9 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தை நான் இன்னும் மறக்கவில்லை. நான் அவரது எந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். மனிஷாவின் இந்த பதிவை பார்த்து இயக்குனர் சீனு ராமசாமி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மைதானா என்ற கேள்வி நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தற்போது இது குறித்து மேலும் ஒரு பதிவை வெளியிட்டுள்ள இயக்குனர் சீனு ராமசாமி, சில கேள்விகள் ப்ளாஷ்பேக் என்று கூறி தனது ட்விட்டர் பக்கத்தில், இடம் பொருள் ஏவல் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாள் ஏன் முதல் ஷாட்டில் 28 டேக் வாங்கினார் மணிஷா,

படப்பிடிப்பு தளத்தில் உதவிட வந்த மூத்த நடிகையர் வடிவுக்கரசி அவர்களிடம் கோபித்து கடுஞ்சொல் வீசினாரே ஏன்?  விஷ்ணு விஷால் ஜோடியாக நடியுங்கள் என நானும் அண்ணாமலை பீலிம்ஸ் கணேஷ் அவர்களும் கேட்ட பொழுது ஏன் மறுத்தார்?  என் சம்பளத்தில் ஒரு லட்சம் நஷ்ட ஈடாக பெற்றாரே ஏன்..?  மூன்று நாட்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தந்த ஹோட்டலில் தன் தயாருடன் தங்கிருந்த மனிஷா அவர்களை கடைசி ஒரு நாள் காலையில் படப்பிடிப்பில் சந்தித்தேன்.

அந்த 28 டேக் மேக்கிங் வீடியோவுக்கு காத்திருக்கிறேன். தெய்வம் அருளனும் இருப்பினும் உங்களோடு திரும்ப பணி புரிய விரும்பினேன். நவீன இலஷ்மி காந்தன் பிஸ்மி அவர்களுக்கு அண்ணன் பிஸ்மி ஒவ்வொரு நாள் தன் பேச்சை எனக்கு அனுப்புவார். ஒரு பூ வாட்ஸ்சப்பில் அவருக்கு போடுவேன் கடைசியில் மலர் அஞ்சலி எனக்கு வைக்க முயல்வார் என நான் எதிர் பார்க்கவில்லை. ஆண்களை படத்தில் நீக்கினால் சிறந்த டைரக்டர் அதுவே பெண்களை நீக்கினால் பாலியல் பழியா? என பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Seenu Ramasamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment