/tamil-ie/media/media_files/uploads/2022/01/Selvaraghavan-1200.jpg)
Tamil director Selvaraghavan tests positive for Covid-19
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளருமான செல்வராகவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
”நான் 23/01/2022 அன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். கடந்த 2 முதல் 3 நாட்களில், யாரேனும் என்னுடன் தொடர்பு கொண்டால், நீங்கள், உங்கள் மருத்துவரை அணுகவும். தயவுசெய்து விழிப்புடன் இருங்கள். அனைவரையும் மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று செல்வராகன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
🙏🏼🙏🏼 pic.twitter.com/jqqPQVEVOT
— selvaraghavan (@selvaraghavan) January 23, 2022
நடிகர் தனுஷின் சகோதரரான செல்வராகவன், காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர்.
எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கசாண்ட்ரா, நந்திதா ஸ்வேதா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை படம் செல்வராகன் இயக்கத்தில் கடைசியாக வெளியானது. அடுத்ததாக, தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இது ஒரு ஆக்ஷன்-த்ரில்லர்.
தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் 2002 இல் துள்ளுவதோ இளமை மூலம் முறையே நடிகராகவும் இயக்குநராகவும் அறிமுகமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் நடிகை, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு மற்றும் நடிகர்கள் சத்யராஜ், அருண்விஜய், ஆகியோர் கொரோனா தொற்று பாதித்து பிறகு குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.