/indian-express-tamil/media/media_files/HybnJhBQijwWBwuNdMmu.jpg)
இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன் திருமணம்
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாவது திருமணம் இன்று (ஏப்ரல் 15) கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு, புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், சில பிரச்சனை காரணமாக ஐஸ்வர்யா – ரோஹித் இருவரும் திருமண உறவில் இருந்து சீக்கிரமே பிரிந்துவிட்டனர்.
இதையடுத்து, தனது மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் இயக்குனர் ஷங்கர். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த தருண் கார்த்திகேயன் தற்போது ஐஸ்வர்யாவுக்கு மணமகனாகி உள்ளார். இவர்களின் நிச்சயதார்த்தம் பிப்ரவரி மாதம் மிகவும் எளிமையாக நடைபெற்றது. அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.
இந்த நிலையில் ஐஸ்வர்யா – ரோஹித் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். நாடாளுமன்றத் தேர்தல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருக்கும் முதல்வர் ஸ்டாலின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மேலும் திரைப்பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, கார்த்திக், மணிரத்னம், சுஹாசினி, நயன்தாரா, விக்னேஷ் சிவன், நளினி உள்ளிட்ட பலரும் திருமணத்தில் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனையடுத்து, ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.