சமூக வலைதளங்களின் மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவில் நடித்து வரும் பிக்பாஸ் பிரபலம் ஜி.பி.முத்து ஒரு நடிகரே இல்லை என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூகவலைதளமாக டிக்டாக்கில் வீடியோ வெளிட்டு பிரபலமானவர் ஜி.பி.முத்து. இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து யூடியூப்’பில் வீடியோ வெளியிட்டு வரும் ஜி.பி.முத்துவுக்கு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.
சமூக வலைதளங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிய ஜி.பி.முத்து சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார். அவருக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகமாக இருந்தாலும், தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்தால் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து படங்களில் நடித்த ஜி.பி.முத்து தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதேபோல் தனது வலைதள நண்பர்களுக்காக அவ்வப்போது வீடியோவையும் வெளியிட்டு வருகிறார். தனது திறமையால் ரசிகர்களை சம்பாதித்திருந்தாலும் ஜி.பி.முத்து ஒரு நடிகர் இல்லை என்று இயக்குனர் வெங்கட்பிரவு கூறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்தில் நடிகர் டேனி ஸ்டூடியோ திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய வெங்கட் பிரபு, வெற்றி தோல்வி இரண்டையுமே தலையில் ஏற்றிக்கொள்ள கூடாது. அதை தலையில் எடுத்தக்கொண்டால் அடுத்த கட்டத்திற்கு நகரவே முடியாது. டெனி நானும் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். ஒரு நடிகராக சிறப்பாக செயல்படக்கூடியவர். கேரக்டருக்கு ஏற்ப ப்ரிப்பேர் செய்து நடிப்பார்.
ஆனால் சிலரால் அப்படி செய்ய முடியாது. இப்போ ஜி.பி முத்து சொல்கிறார்கள்.அவரை நாம் இப்போது எப்படி பார்க்கிறோமோ அப்படித்தான் அவரால் இருக்க முடியுமே தவிர அவர் நடிகர் கிடையாது. அவர் அப்படித்தான் இருப்பார். எல்லா வீடியோவிலேயும் ஒரே மாதிரி தான் இருக்கிறார். நீங்கள் ஆபாசம் என்று சொன்ன வீடியோவை இன்னும் நான் பார்க்கவில்லை. அவர்கள் படத்திற்காக அப்படி பண்றாங்களா? இல்ல சமூகலைதளங்களில் வைரலாக வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்களாக என்பது எனக்கு தெரியவில்லை. அவர்களுக்கு நடிப்பு என்பது 2-ம் பட்சம் தான் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil