/indian-express-tamil/media/media_files/2025/06/28/simbu-ram-str-49-2025-06-28-20-07-34.jpg)
தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வளர்ந்து இருப்பவர் ராம். கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, என தொடர்ந்து வித்தியாசமான படங்களை இயக்கிய இவர், தற்போது பறந்து போ என்ற படத்தை இயக்கியுள்ளார். மிர்ச்சி சிவா, அஞ்சலி இணைந்து நடித்துள்ள இந்த படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.
இந்த படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில், இயக்குனர் ராமுடன் அவரது நெருங்கிய நண்பரும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனருமான வெற்றிமாறன் பங்கேற்று பேசிய வருகிறார். அந்த வகையில் எஸ்.எஸ்.மியூசிக் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், பல சுவராரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.
இதில் வெற்றிமாறன் குறித்து பேசிய, இயக்குனர் ராம், பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படம் பணிகள் அனைத்தும் முடிந்து வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. அப்படி இருக்கும்போது ஒருநாள் நான் வெற்றியை அழைத்து சென்று அந்த படத்தை பார்க்க வைத்தேன். படம் தொடங்கியது முதல் இறுதிவரை அவர் சிரித்துக்கொண்டே இருந்தார். அதன்பிறகு அடுத்தநாள் அந்த படம் விற்பனையாகிவிட்டது. வெற்றி சிரித்தே ஒரு படத்தின் வியாபாரத்தை முடித்துவிட்டதாக கூறினார்.
இதை கேட்ட வெற்றிமாறன், அட்டக்கத்தி படத்தை நான் பார்த்து முடித்தபோது, அடுத்த நாள் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னை அழைத்தார். நான் அட்டக்கத்தி படத்தை வாங்கிவிட்டேன். நீங்கள் சிரித்தததற்காக வாங்கினேனா? அல்லது என் மீதுள்ள நம்பிக்கையில் வாங்கினேனா என்று தெரியவில்லை. ஆக மொத்தத்தில் அந்த படத்தை நான் வாங்கிவிட்டேன் என்று சொன்னார். ரொம்ப சந்தோஷம் என்று சொல்விட்டு வந்தேன் என்று வெற்றிமாறன் கூறியுள்ளார்.
விடுதலை மற்றும் விடுதலை 2 படங்கள் மொத்தமாக 4 மணி நேர படம் இருக்கிறது. இதுதான் வெற்றியின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம் என்று சொன்ன இயக்குனர் ராம், அதை தியேட்டரில் ப்ரியா வெளியிடலாமே என்று சொல்ல, அதற்கு சென்சார் பண்ணணுமே என்று வெற்றிமாறன் கூறியுள்ளார். விடுதலை 2 படத்திற்கு பிறகு தற்போது சிம்பு நடிப்பில், ஒரு படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இந்த படம் குறித்து இவர்கள் இருவரும் பேசிய ஒரு வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Ram: I have watched the announcement video of #SilambarasanTR's next film with Vetrimaran (#STR49)💥#VetriMaaran: We have another video for Title😀#Ram: The vidoe has lot of disclaimers🚫. Selling the film has become more tough than telling it🤝 pic.twitter.com/PSU94Did7S
— AmuthaBharathi (@CinemaWithAB) June 28, 2025
இப்போது வரும் படங்கள் அனைத்திலும் டிஸ்க்ளைமர் போட்டு தான் படத்தை தொடங்க வேண்டி இருக்கிறது. இப்போது சிம்பு சாரை வைத்து வெற்றி இயக்கும் படத்திற்கு டெஸ்ட் ஷூட் என்று ராம் சொல்ல, இல்லை அனோஸ்மெண்ட் வீடியோ என்று வெற்றி சொல்கிறார். இபதை கேட்ட ராம் இப்போ வெற்றியும் அந்த நிலைமைக்கு வந்தாச்சு. இந்த அனோஸ்மெண்ட் வீடியோவையே டிஸ்க்ளைமர் போட்டுதான் வெளியிட வேண்டிய நிலை உள்ளது என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட வெற்றி மாறன் இப்போது அறிவிப்பு வீடியோ வெளியிடுகிறோம். அடுத்து டைட்டிலுக்கு ஒரு வீடியோ வெளியிடுவோம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் சிம்பு படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.