பல இயக்குனர்கள் நடிக்க அழைத்தாலும் தனக்கு இப்போது அது போன்ற எண்ணம் எதுவும் தோன்றவில்லை என்று இயக்குனர் வெற்றிமாறன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் தனது படங்களின் மூலம் உச்சபட்ச ரசிகர்கள் கூட்டத்தை பெற்றவர் வெற்றிமாறன். 2007-ம் ஆண்டு வெளியான தனுஷுன் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இவர், தொடர்ந்து ஆடுகளம், வட சென்னை, அசுரன், விசாரணை என ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் தனது படங்களால் ரசிகர்களை கவர்ந்து தேசிய விருதையும் பெற்றவர்.
தற்போது விடுதலை படத்தின் 2-ம் பாகத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இதனிடையே, பல இயக்குனர்கள் அவரை தங்கள் படங்களில் நடிக்க விருப்பம் விரும்பம் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் அமீர் தனது நெருங்கிய நண்பர் வெற்றிமாறனை வைத்து ஒரு படம் தயாரிக்க விரும்புவதாக கூறினார்.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள வெற்றிமாறன், திரைப்பட நடிப்பு மற்றும் இயக்கம் இரண்டும் முற்றிலும் மாறுபட்ட படைப்பாற்றல். ஒரு சிலரால் மட்டுமே இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள முடியும். தன்னிடம் அது இல்லை, நடிக்கத் தெரிந்தாலும், இப்போதைக்கு கேமரா முன் தோன்றும் எண்ணம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி, பவானி ஸ்ரீ ஆகியோர் நடிப்பில் 'விடுதலை 2' படத்தை இயக்கி வருகிறார். அதன் பிறகு சூர்யா மற்றும் அமீர் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சத்யா மற்றும் சஞ்சனா ஷெட்டி ஆகியோர் நடிப்பில் அமீர் இயக்கி, தயாரித்துள்ள புதிய படமான 'மாயவளை'யையும் வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“